March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் சித்திரை விசுத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் அமைந்துள்ளது திருக் குற்றாலநாதர் ஆலய திருக்கோவில் . வைணவ திருத்தலமாக இருந்த இந்தஆலயம், அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்டது. மேலும் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையும் அமையப் பெற்றது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருத்தலம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் மாசி, பங்குனி, சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சித்திரை விசுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 5.40 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.நாள்தோறும் வெள்ளி ரிஷபம், சிம்மம், கிளி, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் (5ம் – திருநாள்) 9-ஆம் தேதியும், 11-ஆம் தேதி திரிகூட மண்டபத்தில் நடராச மூர்த்திக்கு வெள்ளை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 12-ஆம் தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனையும் நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்

About Author

error: Content is protected !!