February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் குரங்குகள் செத்து மடிவதை தடுக்க வழக்கறிஞர் பிரம்மா கோரிக்கை

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மாவட்டஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில்

எழில் கொஞ்சும் குற்றாலத்தில் குரங்குகள் செத்து மடிவதை தடுக்க வேண்டுகிறேன்
குற்றாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது
கேமரா வயரில் முள் கம்பி பொருத்தப்படு அமைக்கப்பட்டுள்ளது அதில் பல குரங்குகள் தாவி குதிக்கையில் குரங்கின் கைகளில் முள் கம்பி குத்தி புண் ஏற்பட்டு (குரங்குக்கு புண் வந்தால் சொரிந்து பெரிதாக்கும்) மரணம் ஏற்படுகிறது.ஆனால் பழைய குற்றாலத்தில் அமைக்கப்பட்ட கேமரா முள் கம்பியில்லாமல் பைப்பால் அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் புதியதாக அமைத்த கண்காணிப்பு கேமரா விதி முறைகளை மீறி முள் கம்பியால் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது ஒப்பந்தகார் லாபம் பெறவேண்டும் என்பதாலும், அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற வேண்டும் என்பதாலும் அப்பாவி வாயில்லா ஜீவன் மந்திகள் மடிவதை தடுக்க வேண்டுகிறேன்,லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கும் என்று நம்புவோம் என குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!