June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் குடிநீர் தொட்டியில் வழியும் தண்ணீரில் குளித்து செல்லும் நிலை

குற்றால அருவிகளில் மதிமான நீர்வரத்து இருந்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாத சூழல் இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குற்றாலம், ஐந்தருவியில் அதிகரித்து காணப்படும் சுற்றுலா பயணிகள் கூட்டம். அருவிகளில் குளிக்க முடியாத சுற்றுலா பயணிகள் பேரூராட்சி குடிநீர் தொட்டியில் நிரம்பி வழியும் தண்ணீரில் குளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த தென்மெற்கு பருவமழை கடந்த வாரம் பெய்ய தொடங்கியது. தொடங்கிய 3 நாட்கள் மட்டும் மிதமான மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் மதிமான நீர்வரத்து இருந்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாத சூழல் இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிக மிக குறைவான நீர்வரத்தே உள்ளது. நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பேரருவியில் குறைவாக விழுகின்ற தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஐந்தருவியில் சற்று அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரிசை ஐந்தருவி பேருந்து நிலையம் வரை உள்ளது. அருவிகளில் குறைவான நீர் வரத்து உள்ளதால் பல மணி நேரம் காத்திருந்து குளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்க முடியாத சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் உள்ள பேரூராட்சி குடிநீர் தொட்டியில் இருந்து நிரம்பி வழிகின்ற தண்ணீரில் குளித்து செல்கின்றனர்.

About Author

You may have missed

error: Content is protected !!