February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குற்றாலத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் குற்றாலத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி 15 நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது, பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனையில் நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், சாதாரண முறை அறுவை சிகிச்சைகள் குறித்து அந்தந்த துறைகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களால், செயல்விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் 15 நோயாளிகளுக்கு குடல் இறக்கம், குடல்வால்வு, பித்தப்பை கல். மார்பக புற்றுநோய், தைராய்டு கட்டி உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையினை சுசிலா மருத்துவமனை டாக்டர் எஸ்.குணசேகரன், பாலாஜி மருத்துவமனை டாக்டர் த.பாலாஜி, கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பழனிவேல், லெட்சுமிமாதவன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மதுபாலா, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுந்தரம், டாக்டர்கள் சதாசிவம், ராகேஷ்;, முகம்மது இப்ராகிம் உள்ளிட்டோர் செய்தனர்.
இம்மாநாடு தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் குற்றாலத்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஏ.எஸ்.ஐ. துணைத்தலைவர்; டாக்டர் ரகுராம், டாக்டர்கள் கீதாலட்சுமி, விஜேந்திரன், செந்தில்ஆறுமுகம், பேராசிரியை கமலின்விஜி, ஐரின், பபிதா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவர், மாணவியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் எஸ்.குணசேகரன் வரவேற்றார். முடிவில் டாக்டர் அலெக்ஸ் நன்றி கூறினார்.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மருத்துவர் எஸ்.குணசேகரன் தலைமையில் டாக்டர்கள் த.பாலாஜி, அலெக்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!