June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குறைந்த விலையில் ஆல்கஹால் சானிடைசர் திருப்பூர் நிர்வாகம் அசத்தல்

ரூபாய் 60 க்கு ஆல்கஹால் சானிடைசர் -திருப்பூர் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அசத்தல்

தமிழகத்தில், ‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கையால், முக கவசம், சானிடைசர் போன்ற வற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மருந்து கடைகளில் இவை கிடைப்பதில்லை. கொரோனா களேபரத்தில் கொள்ளை லாபம் பார்க்க நினைக்கும் வியாபாரிகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆழல் ஏற்பட்டுள்ளது

இதனை தடுக்கும் பொருட்டு இவற்றை அத்தியாவசிய பொருட்களாக, மத்திய அரசு அறிவித்துள்ளதால், கூடுதல் விலைக்கு எவரேனும் பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மருந்து கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில், இவை விற்கப்படுகிறதா என்பது குறித்து, மருந்தக ஆய்வாளர்கள், ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு, முக கவசம், சானிடைசர் போன்றவற்றை, அதிக விலைக்கு விற்ற, 40 மருந்து கடைகள் பூட்டி, ‘சீல்’ வைத்தனர். இந்த கடைகள் ஏழு நாட்கள் செயல்பட முடியாது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டும், கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர், குருபாரதி தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தப்பட்டு, 11 கடைகளுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்நிலையில் ரூபாய் 60 க்கு திருப்பூர் ஆட்சியர் அலுவலகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஆல்கஹால் சானிடைசர் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது , இதன் தொடர்ச்சியாக இன்று முதல் ஆட்சியர் அலுவலகம், மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் , பாராட்டையும் பெற்றுள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!