June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குரூப்-4 தேர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் மூலம் நடைபெறவுள்ள குரூப்-4 தேர்வு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 01.09.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று
முற்பகல் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -4 (Group -IV)-ல் அடங்கிய
பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள், திருநெல்வேலி மாவட்டத்தில்

1) திருநெல்வேலி, 2)ஆலங்குளம் 3) அம்பாசமுத்திரம், 4) நாங்குநோp 5) பாளையங்கோட்டை 6)இராதாபுரம்7)சங்கரன்கோவில் 8)செங்கோட்டை 9) சிவகிரி 10) தென்காசி, 11) வள்ளியூர் 12)
வீரகேரளம்புதூர்13) சேரன்மகாதேவி 14) கடையநல்லலூர் 15) மானுர்16) திருவேங்கடம் ஆகிய 16 தேர்வு மையங்களில், 282 கல்வி நிலையங்களில் (316 HALLS) நடைபெறவுள்ளது.
இத் தேர்வினை திருநெல்வேலி மாவட்டத்தில் 85509 நபர்கள் தேர்வு எழுத உள்ளார்கள்.
இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 24 பறக்கும்படைஅலுவலர்களும்,
வட்டாட்சியர் ,துணை வட்டாட்சியர் நிலையில் 64 சுற்றுக்குழு அலுவலர்களும், உதவியாளர்
நிலையில் 316 ஆய்வுப்பணி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

தேர்வு மையங்களில்தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேரூந்துகளை தேர்வு மையத்திற்கு சீராக இயக்கக்கேட்டும்சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் கல்விநிலையங்களுக்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுஎழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தேர்வு கூட வளாகத்தினுள் செல்போன்கள் மற்றும்எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் கொண்டு செல்வதை தவிர்க்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மையவளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் ராஜசேகரன் செய்தி
மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் குழு
உறுப்பினர் கார்த்திகேயன், துணை வட்டாச்சியர் நவாஸ், உட்பட அனைத்து
வட்டாச்சியர்கள் தேர்வுகுழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து
கொண்டனர்

About Author

You may have missed

error: Content is protected !!