July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நன்றி VectorStock

குடும்பத்தலைவியின் ஆளுமை ஊரடங்கு காலத்தில் ஒப்பீடு இல்லாதவை-கல்வியாளர் ஜா.இராஜசேகரன்

ஊரடங்கு பிரகடனப்படுத்தி இன்று ஒன்பதாவது நாள். குடும்பங்களோடு கொத்துக்கொத்தாய் முடங்கிக் கிடந்து ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பத் திரும்ப பார்பது இந்த தலைமுறைக்கு புதுமை.

என்று தணியும் இந்த தாகம்

ஒவ்வொருவர் மனதிலும் தோன்றும் எண்ணம் விதிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ல் விலகுமா என்பது தான். உலகமெங்கும் பாதிக்கப்பட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் தேசத்தில் பாதிப்பும் உயிரிழப்பும் குறைவுதான். தமிழகத்தில் தொடர்ந்து 14 நாட்கள் கொரானா அறிகுறி இல்லை, ஒருவருக்கு கூட புதிதாக கொரானா உறுதிசெய்யவில்லை என்ற நிலை வரும் போது ஊரடங்கு நிறைவுபெறும்.

ஆய்வில் புதிய தகவல்

அமெரிக்காவை சார்ந்த மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி லிடியா பவுரவியாவால் கருத்துப்படி கொரானா பரவுவதை தடுக்க 2 மீட்டர் இடைவெளி தேவை.கடுமையான தும்மல் மற்றும் இருமல் மூலம் வெளிப்படும் திரவத்துளிகளிலிருந்து 27 அடி தூரம் வரை சென்று பரவும் சத்தி கொரளா வைரஸ்ஸிக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயைவிட பீதியால் அதிக உயிர் இழப்புகள் நடந்துவிடக் கூடாது ,மத்திய அரசு கவனமாக இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது . மக்கள் பொது இடங்களில் குவிவதும், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த அதிரடியாக செயல்படும்போது முண்டியடித்து ஓடுவதால் அதிக இழப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது கவனமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் பய உணர்வு

கடந்த மார்ச் 26, 27 தேதிகளில் இந்திய தனியார் நிறுவனமான ஐஏஏன்ஸ் நடத்திய ஆய்வில் முதலில் கொரான வைரஸ் பற்றி பயமின்றி இருந்த மக்களில் 48 சதவிதம் மக்கள் வைரஸ் தாக்கி விடும் என்று தன் பயத்தில் இருப்பதாகவும் 46 சதவிதம் பேர் சிரமம் வராது என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஊடங்களை பார்த்துக் கொண்டே இருப்பதால் இத்தகைய அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நன்றி VectorStock

குடிப்பழக்கத்தால் ஆபத்து

இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இன்று வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கு காலத்தில் உடல் அசைவின்றி அதிக நேரத்தை செலவழிப்பதால் மதுப்பழக்கத்தையும் புகைப்பிடிப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்..முடங்கிக் கிடப்பதால் ஏற்பட்ட சலிப்பில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்துபவர்கள் திடீரென்று நிறுத்தினால் கைகால் நடுக்கம் ,தலைவலி , வாந்தி குமட்டல் , வலிப்பு , மன பிரம்மை , வேகமான இதயத்துடிப்பு ,வியர்வை கொட்டுதல் , அடிக்கடி எரிச்சல் ஏற்படும். இதனால் கேரள அரசு போதை பழக்கம் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர் பரிந்துரையுடன் குறிப்பிட்ட அளவில் மதுவை வாங்கி பயன்படுத்தலாமென்று உத்தரவிட்டுள்ளது..இதற்குநாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது..

வாழ்வியல் பாதிப்புகள்

இன்றைய இயந்திரமயமான வாழ்கையில் நேரம் தவறிய உணவு பழக்கம் , தூக்கமின்மை ,வேலைப்பளு ,குடும்ப சுமை , குடும்ப பெரியவர்களின் ஒத்துழையாமை , வாரிசுகளின் குறிக்கோளற்ற நிலை பல குடும்பங்களை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சமன் இல்லா சர்க்கரை

தமிழகத்தில் வாழும் 8 1/2 கோடி மக்களில் 6.8 சதவித மக்கள் 22 லட்சம் பேர் சக்கரை வியாதியோடு உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். கிராம மக்கள்தொகையில் 28 சதவிதமும் நகர மக்களில் 34 சதவிதமும் உயர் ரத்த அழுத்தத்தோடு தினமும் உணவுக்கு இணையாக மருந்தை சாப்பிட்டு வருகின்றனர்..மொத்த மக்களில் 5 ல் இரண்டு பேருக்கு வாழ்வு முறை மாற்றத்தால் சக்கரை தொற்றிக்கொண்டது. சக்கரை வியாதி இருப்பவர்களில் பலர் கட்டுப்பாட்டில் இல்லாமலும் பெரும்பாலோர் தமக்கு இருப்பதை முறைப்படி அறியாமலும் மெத்தைபோக்கில் வாழ்ந்துவருகின்றனர். இப்படிப்பட்டவர்களில் பலர் மனதளவில் வரும் உடனடி பாதிப்புகளை தாங்கிக்கொள்ளமாட்டார்கள். இது தவிர இப்படிப்பட்ட பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட இதைப்பற்றியே தொடர்ந்து பேசும்போதும் தொடர்ந்து வலையதளங்களை பார்வையிடும் போது மனதளவில் பாதிப்பு ஏற்படும் .இந்த தருணங்களில் பெண்மைக்கு புனிதம் பணிக்கும் வகையில் குடும்பத்தலைவி ஆளுமையை அரங்கேற்றி அன்புடன் குடும்பத்தினரின் மனவலிமையை வலுப்படுத்தி பெருமை சேர்க்க வேண்டும் வேண்டும்.

பரிந்துரை செய்யுங்கள்

உங்கள் பார்வையில் உறவினர்களோ, நலவிரும்பிகளோ வித்தியாசமான பார்வையோடு பிரம்மை பிடித்ததுபோல் இருப்பது மட்டுமல்லாமல் கைகால் நடுக்கத்தோடு இருக்கிறார்களா என்பதை பாருங்கள். கண்முன்னே வித்தியாசமாக தெரிகிறது , யாரோ கண்முன்னே மிரட்டுவதுபோல் உள்ளது என பய உணர்வை வெளிப்படுத்துவார்கள். அவர்களை உடனே மனநல மருத்துவரையோ அல்லது மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள சமூக அறிவியல் ஆலோசகர்களையோ தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். வரும் நாட்களில் மனநலம் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். மனநல ஆலோசனை பெறாவிட்டால் விபரீத ஆபத்துக்களை ஏற்படுத்திவிடும். மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது.. கடமையையும் தாண்டி சேவையாக செய்து வலிமையான சமுதாயத்தை கட்டமைத்து தேசத்தை காப்போம்…..

சமூக ஆர்வலர்  ,கல்வியாளர் ஜா.இராஜசேகரன் .

About Author

error: Content is protected !!