May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர்
மணிக்கூண்டு அருகே மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில செயலாளர் பைசல் கண்டன உரை நிகழ்த்தினார்.

அப்போது தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மத ரீதியில் பிளவுபடுத்துவதாகும்.
பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற வரிகளால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் அதிகரித்திருக்கிறது. பாலியல் கற்பழிப்புகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. இது போன்ற பிரச்சினைகளில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதை பற்றி சிறிதும் கவலையில்லாமல் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இயற்றுவதன் மூலம் ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை.
நாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதன் மூலம் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இல்லை. அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருக்கிறது.
ஹிட்லரின் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் நெல்லை யூசுப் , மாவட்ட பொருளாளர் செய்யது மசூது சாகிப் , மாவட்ட துணைத் தலைவர் அப்துல் காதர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல்ஸலாம், புகாரி ,ஹாஜா மைதீன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் டவுண் சாகுல்கமீது ,பேட்டை அப்துல்காதர் , பஜார் அல்தானி , மதீனாநகர் தேஷ்முகம்மது, ரஹ்மாணியாபுரம் பாரூக் ,மக்காநகர் அன்சாரி ,தவ்ஹீது நகர் குல்லி அலி உட்பட இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமாமுஸ்லிம் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கிற்கு எதிராக பதாகையை ஏந்தி கண்டனங்களை பதிவு செய்தனர்.
இறுதியாக மாவட்ட துணைதலைவர் அப்துல்காதர் நன்றி கூறினார் .ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை சால்பில் அனுமதி வழங்கப்படவில்லை இதனை அடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை முதலில் கைது செய்தனர் பின்னர் அனைவரையும் கலைந்து போக செய்தனர் கைதானவர்களையும் உடனே விடுவித்தனர் இந்த போராட்டத்தில் ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகீர்உசேன், புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலசுசுந்தர் ,ஆகியோர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர் உட்பட 220 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

About Author

You may have missed

error: Content is protected !!