May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

குடிக்க தண்ணீ இல்ல ஓட்டு ஒரு கேடா ? தேர்தலை புறக்கணிக்கப் போறமுங்கோ

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் போக்குவரத்துத் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் தாமிரபரணி குடிநீர் இருந்தும் கடந்த 20 தினங்கள் குடி நீர் வினியோகம் செய்யாமல் பணியாளர் ,அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்க போவதாக தென்காசி ஆர்.டி.ஓ விடம் புகார்,மேலும் பல இடங்களில் இதே நிலைதான் அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியப் பதில் தான் கிடைக்கிறது ,தண்ணீர் வருகிற குழாய் உடைந்து இருக்கு சரிசெய்றோம் இதான் அதிகபட்ச பதில் பொதுவா பல இடங்களில் தண்ணீர் குறிப்பிட நேரத்தை விடவும் குறைவாக வருகிறது ,அப்படியே வரும் பட்சத்தில் குறைந்த அளவு நீர்தான் விடுகிறார்கள் கோடை காலம் என்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்,குடிநீர் கட்டணம் கட்டவில்லை என்றால் இணைப்பைஓதுண்டிக்கத் தெரிந்த அதிகாரிகளுக்கு பொதுமக்களுக்கு மாற்று ஏற்ப்பாடு செய்து தண்ணீர் வழங்கத் தெரியவில்லை ,ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் ஒரு போதும் விலை போகாதீங்க உங்களின் அடிப்படை தேவையான குடிநீரை கிடைக்கச் செய்யாத அரசியல் வாதிகளை இனங்கண்டு தேர்தலில் உங்கள் சக்தியை காண்பியுங்கள் ,ஓட்டு கேட்டு வருவோரிடம் உங்கள் குறைகளைச் சொல்லி தீர்க்க மு வருவாரா என கேட்டு அவர்கைப்பட எழுதி வாங்கி  ஓட்டுபோடுங்கள் ஜெயித்த பின் அவர் செய்யவில்லை என்றால் அதை பிரதி எடுத்து பரப்புங்கள் ,குடிநீர் கிடைக்கவில்லை என்றால் தயவு செய்து அரசியல்வாதிகளின் வீட்டை முற்றுகையிடுங்கள்அப்போதுதான் அவர்களும் உணர்வார்கள்

About Author

error: Content is protected !!