July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.2 கோடியில் புதிய பாலம்

கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டவுள்ள புதிய பாலத்திற்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. அடிக்கல் நாட்ட மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ் கல் வெட்டை திறந்து வைத்தார்
கீழப்பாவூர் பெரியகுளத்தின் தென்பகுதியில் பாலம் அமைத்துத்தர வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் அப்பகுதியில் புதிய பாலம் அமைத்திட,திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணி துவக்க விழா கீழப்பாவூர் பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதிஷ் தலைமையில், கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.


முன்னதாக கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி பேசுகையில் இந்த குளம் இப்பகுதி மக்களின் நீண்ட காலகனவு இதற்காக பலர் பல முயற்சிகள் செய்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை ,நான் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் ,நானும் மறைந்த முதல்வர் அம்மாவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன் அவர்களும் ஒப்புதல் தந்தார்கள் தற்போது இது குறித்து பொதுப் பணித்துறை அமைச்சரை பார்க்கும் இது குறித்த கோரிக்கையை தொடர்ந்து வைத்தேன் அம்மா வழி நடக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதற்க்கு அனுமதி அளிக்க இன்று அடிக்கல் நாட்டி துவங்கஇருக்கிறோம் விழாவிற்கு கட்சி பாகுபாடின்றி அனைவரும் வந்ததில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் ,மிக விரைவில் இப்பாலம் மக்கள்பயன் பாட்டிற்கு வரும் இனி பொதுமக்களும் விவசாயிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தி தங்கள் விளை பொருட்களை சிரமம் இன்றி செல்ல வசதியாக இருக்கும் கீழப்பாவூர், நாகல்குளம் பொதுமக்களும் மிகுந்த பயன்பெறுவர் இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பாலசுப்பிரமணியன், சண்முகசுந்தரம், பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி, உதவி செயற்பொறியாளர் அரிகரன், முன்னாள் ஒன்றிய செயலர் கே.ஆர்.பால்துரைஇளைஞர் பாசறை மாவட்ட செயலர் சேர்மபாண்டி, ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், நகர செயலாளர் ஜெயராமன், , நிர்வாகிகள் தீப்பொறி அப்பாத்துரை, மதியழகன், ஒப்பந்தக்காரர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!