February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் திருட்டு முயற்சி

தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் அமைந்துள்ளது நரசிம்மர் கோவில். இந்த  கோவில் வளாகத்தில் பெருமாள் கோவிலும் உள்ளது. நேற்று   பொங்கல் பண்டிகை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது பூஜை முடிந்து இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றனர். இன்று காலை சென்று பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கேட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டனர் அப்பொழுது கொள்ளையர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள கேட்டில் உள்ள பூட்டு மற்றும் பெருமாள் கோவிலில் உள்ள மரக்கதவையும் கம்பியால் நெம்பி கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர், அத்துடன் கோவிலில் மின் இணைப்பையும் நிறுத்தி வைத்துள்ளனர். உள்ளே புகுந்த கொள்ளையர்கள் சுவாமி நகைகள்   எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை (டிவீஆர்) எடுத்துக்கொண்டும் கேமிரா ஒயர்களை சேதப்படுத்தியும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து  பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் முன்பு ஒருமுறை இந்த கோவிலில் இப்படிப்பட்ட  திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

About Author

error: Content is protected !!