May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் உமையபார்வதி,முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா

கீழப்பாவூர் வாணியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சூளைத் தெருவில் அமைந்திருக்கும் உமையபார்வதி, முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா நேற்று துவங்கியது. காலையில் ஹோமம் மற்றும் யாக பூஜை நடந்தது. மாலையில் மேள தாளத்துடன் வில்லிசையும் சிறப்பு அலங்காரத்துடன் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது . காலையில் வில்லிசை, மேளம் மற்றும் செண்டா மேளத்துடன் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் கோயில் வளாகத்தில் பொங்கிலிடுதல் நிகழ்ச்சியும், மாலையில் யானை முன் செல்ல மேள தாளத்துடன் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலாவும் , அதை தொடர்ந்து குழந்தைகளின் பூந்தட்டு ஊர்வலமும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை உமையபார்வதி கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!