March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூரில் மழையின் காரணமாக மின்கம்பம்  சாய்ந்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தின் பல  மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை பெய்யும் என்பதால் சில  மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …இதனால் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க அரசு முனெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறது இந்நிலையில் நேற்று ,திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியோடு கூடிய கனமழை பெய்து வருகிறது நேற்று  .பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து  காற்றுடன் கூடிய   பெய்த மழையால் தென்காசி & நெல்லை &  நெடுஞ்சாலை கீழப்பாவூர் விலக்கு அருகே  அமைந்துள்ள மின்கம்பம் நேற்று மதியம் திடீரென்று சரிந்து மின்கம்பி ரோட்டின் குறுக்கே விழுந்தது.


அப்போது அவ்வழியே நெல்லையிலிருந்து  தென்காசி சென்ற அரசு பஸ் ஒன்று  வந்து கொண்டிருந்து. மின்சார கம்பி ரோட்டின் குறுக்கே விழுந்ததை பார்த்த அரசு பஸ் டிரைவர்  சமார்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து கீழப்பாவூர் மின்வாரிய அலுவலகத்திற்கும், பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்இணைப்பை துண்டித்து மின்கம்பியை சரி செய்தனர்.
பாவூர்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.உடனடியாக களத்தில் இறங்கி மின் இணைப்பை சரி செய்து சீரான மின் இணைப்பு கிடைக்க உதவிய மின்சாரவாரிய ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்

About Author

error: Content is protected !!