May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தங்களுக்கு குக்குர் சின்னம் வழங்கக் கோரி தினகரன் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தார் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், அக்கட்சி கேட்கும் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில், சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையமோ அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஒரு பொதுவான சின்னத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே வழங்க முடியும். பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் தினகரனுக்கு பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியது மேலும் குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றோ தென்காசி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தனுஷ்கோடி என்பவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!