May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சுரண்டை காவல் நிலையம்

காவல் நிலையத்துக்கு சொந்தமான நிலத்தை பட்டா போட்ட கில்லாடிகள்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறை இடத்தை ஜமீன் சொத்து என்ற பெயரில் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது

சுரண்டை காவல் நிலையம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக சுரண்டை சங்கரன் கோவில் சாலையில் மையப்பகுதியில் 2.15ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது கடந்த சில வருடங்களாக இந்த இடம் பயன்படாமல் இருந்தது. இதை தங்ககுக்கு சாதகமாக்கி ஜமீன் சொத்து என்ற பெயரில் போலி ஆவணம் தயார் செய்து ஆயன் நம்பியாருக்கு 2.15 ஏக்கர் பவர் பத்திரம் தயார் செய்து மொத்த இடத்தையும் போலி பத்திரம் மூலம் பெயர்மாற்றியுள்ளனர்.
இதற்கு உடந்தையாக ராஜேந்திரன் இள நிலை உதவியாளராக வேலை பார்த்து தற்போது சிவகிரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காவல்துறை அந்த இடம் குறித்து சந்தேகப்படியாக விசாரிக்க துவங்கியதில் மேற்கண்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கில் சம்பந்த பட்ட குற்றவாளிகள் 1.இசக்கி பாண்டியன் 2.ஆயன்நம்பியார் 3.ராஜகோபால் 4.பூபதி பெருமாள் பத்திர எழுத்தர் இடைகால் 5.முருகேச குமார் 6.சிவசக்தி 7.ஆவண எழுத்தர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது 465,467,420 ipஉ ஆகிய பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இந்த வழக்கை டி.எஸ்.பி. ஜாகீர் உசேன் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

About Author

error: Content is protected !!