June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காவல்துறை தாக்கியதாக முன்னாள் இராணுவ வீரர் மருத்துவனையில் அனுமதி

காவல்துறையினர் தாக்கியதாக கூறி முன்னாள் ராணுவ வீரர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி.

தென்காசி மாவட்டம் வல்லம் சிலுவை முக்கு பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர பாண்டியன் இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக தென்காசி சார்பதிவாளர் அலுவலகம் வந்துள்ளார். அவருடன் அவருடைய உறவினர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். வேலைகள் முடிந்து ஊர் திரும்பி கொண்டிருக்கும் போது வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர் வாகனத்தை நிறுத்தாமல் இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுபோதையில் இருந்த தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது குடித்து விட்டு வாகனத்தை இயக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது ரவீந்திர
பாண்டியன் தங்களால் இப்போது அபராதம் செலுத்த முடியாது நீங்கள் இனைய தள அபராத ரசீது தாருங்கள் நான் அதை நீதிமன்றத்தில் கட்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் .அதனை தொடர்ந்து ரவீந்தரபாண்டியனை காவல்துறை வாகனத்தில் ஏற்றி தென்காசி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் இன்று மதியம் ரவீந்திர பாண்டியன் காவல்துறை தாக்கியதாக கூறி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

About Author

error: Content is protected !!