June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காவல்துறையினா் மீது அவதூறு பரப்பிய கட்சிப் பிரமுகர் கைது

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று  மாலை வாலிபர் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சட்டைப் பையில் இருந்த ஏடிஎம் கார்டை ஆய்வு செய்தபோது சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஞானம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் களக்காடு போலீஸ் சரகம் சிங்கி குளத்தை சேர்ந்த தெய்வநாயகம் மகன் ரமேஷ் (34) என்பது தெரியவந்தது. இவருக்கு மீனா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். ரமேஷ் கடந்த 20 வருடங்களுக்கு முன் சென்னையில் குடியிருந்து அங்கு வேலை செய்து வருவதாகவும் ஞானத்தின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும் தெரியவந்தது. இன்று காலை சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கு இருந்தவர்களிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் நேற்று  மாலை அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இவரது சகோதரர் சிஎன் கிராமத்தில் வசித்து வருகிறாராம்.. இதனிடையே நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மார்க் பாரில் இருந்து மது அருந்திவிட்டு வந்த நாசரேத்தை சேர்ந்த புதிய தமிழகம் பிரமுகர் தங்கதுரை என்பவர் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக ரூ 10,000 போலீசார் அபராதம் விதித்ததால் தான் ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அங்கு தெரிவிக்கவே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த தகவல் வாட்சபில் தீயாகப் பரவியது இந்நிலையில் போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர் மதுபோதையில் அவதூறு பரப்பி வந்தது தெரிய வந்தது. அவரை மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

You may have missed

error: Content is protected !!