June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கும்பாபிஷேகம்,சிறப்பாக பணியாற்றிய காவல்துறைக்கு ராயல் சல்யூட்

சுமார் 400 அடி உயரம் கொண்ட மலைக்குன்றில் அமைந்துள்ள திருமலைக்குமாரசுவாமி கோவிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

சுமார் 400 அடி உயரம் கொண்ட மலைக்குன்றில் அமைந்துள்ள திருமலைக்குமாரசுவாமி கோவிலில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

நெல்லை மாவட்டத்தில் பழமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது திருமலைக்குமாரசாமி கோவிலாகும். இந்த ஆலயம் சுமார் 400 அடி உயர மலைக்குன்றில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இங்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த கோவிலில் முன்னாள் திருப்பணிக்குழு மற்றும் அறங்காவலர் தலைவர் அருணாசலம் என்பவர் உபயத்தில் 5 நிலை ராஜ கோபுரம் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது

.

முன்னதாக அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜை, பரிவார மூர்த்திகள் யாகசாலை பூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாகுதி ஆகியன நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை தங்கத்தேர் உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு பண்பொழி சிவன் கோவிலில் சண்முகர் – தெய்வானை திருக்கலயாண வைபவம் நடைபெற உள்ளது.


இந்த விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் ,எந்தவித விபத்தோ அசம்பாவிதங்களோ நடைபெறாமல் இருக்க மிகுந்த பொறுப்போடு ,மக்கள் மனம் நோகாது ,மழை என்றும் பாராது நனைந்தபடி பணியாற்றிய காவல் துறையினரின் பங்கு மிகவும் பாராட்டுகுரியது நமது http://pavoor.in சார்பாக காவல் பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறைக்கு வாழ்த்துகள்

https://youtu.be/ClN5pf6__M4

About Author

error: Content is protected !!