July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்

காவலர் , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்குகதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

காவலர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம்வழங்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை 

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியியிட்டுள்ள அறிக்கையில்


தமிழகத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கியதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

அதே வகையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இதேபோன்று ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடும் வெயிலையும் பாராமல் காவலர்களும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அதனை கருத்தில் கொண்டு இந்த பணிகளை செய்துவரும் அனைவருக்கும் தேமுதிக சார்பாக எனது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். என தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்

About Author

error: Content is protected !!