March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காளையன் கோமாதா குடும்பத்தில் வசந்தம் வீச பால் முகவர் சங்கம் வாழ்த்து செய்தி

விவசாய பொருட்கள் உற்பத்திக்கு விவசாய பெருமக்களான உழவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களின் வீட்டு செல்லப்பிள்ளைகளாகவும் விளங்கி வருவதோடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் இளம் காளையரோடு போட்டி போட்டுக் கொண்டு திமிலோடு மல்லுக்கட்டி சண்டையிடும் வீரர்களாகவும் விளங்கி வரும் காளையன் குடும்பத்தாருக்கும்,

தற்போதைய சூழலில் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களை விட கோமாதாவின் பாலினை குடித்து வளர்ந்தவர்களே அதிகம் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி வயதான குழந்தைகள் (முதியவர்கள்) வரையிலும், சாதாரண நோய் தாக்குதலுக்கு உள்ளானவர் தொடங்கி, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோர் வரையிலும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தன் இரத்தத்தின் ஒரு பாதியை பாலாக வழங்கி வரும் கோமாதாகுடும்பத்தாருக்கும்,

சூறாவளி புயலோ, அடைமழையோ, கடும் பனிப்பொலிவோ அல்லது பெருவெள்ளமோ இயற்கை சீற்றங்கள் எதுவாயினும் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திட மக்கள் சேவையே மகேசன் சேவை என
பால் விநியோகத்தையே மூச்சாக சுவாசித்து வரும்
எனதருமை பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் சமுதாயத்திற்கும்,

பால்வளத்துறையில் பால் முகவர்களோடும், விவசாய பெருமக்களோடும் நகமும், சதையுமாக பின்னிப் பிணைந்திருக்கும் அரசு, தனியார் பால் நிறுவனங்களுக்கும்,அதன் உரிமையாளர்கள், உயரதிகாரிகள், விற்பனை பிரதிநிதிகள் மற்றும்
அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும்,

இனிய மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சமர்ப்பணம் செய்யும் அதே வேளையில் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிடவும், நலமும், வளமும் பெருகிடவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்
இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர்
சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!