February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கால்வாயை காணவில்லை கலெக்டரிடம் தேமுதிக பரபரப்பு புகார்

குற்றாலம் – செண்பக கால்வாயை காணவில்லை.கலெக்டரிடம் தேமுதிக பரபரப்பு புகார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இருந்து காசிமேஜர்புரம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் செண்பக கால்வாயை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறு தேமுதிக நிர்வாகி தென்காசி கலெக்டரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினர் காசிமேஜர்புரம் இ.வேலாயுத பாண்டியன் தென்காசியில் நடைபெற்ற மாவட்ட குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தென்காசி மாவட்டத்தில் பரந்து விரிந்து கிடந்த விவசாய நிலங்கள் அனைத்தும் அழிந்து இன்று கட்டிடங்களாக மாறிவிட்டன. இதற்கு காரணம் விவசாயிகள் அல்ல.என்பதை கலெக்டரின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரும் செண்பகக் கால்வாய் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களால் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. காரணம் குறிப்பிட்ட சில ஆண்டுகள் இந்த பகுதியில் விவசாயம் செய்யாவிட்டால் விவசாயிகளிடம் அந்த நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டுமணைகளாக மாற்றி அதிகவிலைக்கு விற்பனை செய்து அதன் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலை வளப்படுத்தி கொள்ளலாம் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

குற்றாலம் மெயின் அருவியிலிருந்து காசிமேஜர்புரம் பகுதிக்கு தண்ணீர் வரும் செண்பக கால்வாய் சுமார் 5 அடி அகலமும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இப்போது செண்பக கால்வாயின் பெரும்பகுதியை காணவில்லை. ரியல் எஸ்டேட் செய்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்.

இதனால் செண்பக கால்வாய் அடையாளம் தெரியாத அளவிற்கு சரள் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால் காசிமேஜர்புரம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. இதனால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் குற்றாலம் காசிமேஜர்புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு காரர்களால் திருடப்பட்டு காணாமல் போன செண்பக கால்வாயை கண்டுபிடித்து. அந்த கால்வாயை மீட்டு விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் அதனை தூர்வாரி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் சீரமைத்து கொடுக்க வேண்டும் என அவர் அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Attachments area

About Author

error: Content is protected !!