July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காலியாகிறது தினகரன் கூடாரம் அதிமுகவில் இணைந்தார் அமமுக மாவட்ட செயலாளர்

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் இடைதேர்தல்களில் டி.டி.வி .,தினகரன் கட்சி படுதோல்வி அடைந்தது இதையடுத்து இவரை நம்பி பலன் இல்லை என்று திருநெல்வேலி அமமுக கவினர் அதிமுகவில் இணையத் தொடங்கினர் இந்நிலையில் இன்று திருநெல்வேலி புறநகர் அமமுக மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கலா பத்மபாலா உள்ளிட்ட நெல்லை புறநகர் மாவட்ட அமமுகவினர் கழக  ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக துணை முதல்வ ருமான O. பன்னீர் செல்வம் அவர்கள் முன்னிலையில்   அஇஅதிமுக வில் தங்களை  இணைத்துக் கொண்டனர்   ,புறநகர் மாவட்ட கழகசெயலாளர்  KRP. பிரபாகரன் உடனிருந்தார்,  தாய்க்கழகமான திருநெல்வேலி புறநகர் அமமுகமாவட்ட கழகச் செயலாளர் அதிமுகவில் இணைந்ததை அடுத்து திருநெல்வேலியில் டி.டி.வி.தினகரன் கூடாரம் காலியானது மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத் தமிழனும் இன்று தன்னை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக்கொண்டார்

About Author

error: Content is protected !!