June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாயிண்ட் ஆப் சேல் கருவி

கார்டை உரசுங்க சரக்கை எடுங்க ஸ்மார்ட் ஆகும் டாஸ்மாக்

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாயிண்ட் ஆப் சேல் கருவி

பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன
இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ ஆர் கோடு, யுபிஐ உள்ளிட்டவை மூலம் மின்னணு முறையில் மட்டுமே செலுத்தமுடியும்.
இதனால் ஊழல் தடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். இம்முறையை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யவுள்ளதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது.
ஒரே ஒரு சிரமம் இருக்கு போதையில் இருக்கும் சமயத்தில் விற்பனையாளர்கள் அதிக தொகையை எடுக்க வாய்ப்பு உள்ளது , இப்படி பிரச்னை பொதுவாக சூப்பர் மார்கெட்ல நடக்கிறது இங்க என்ன பூதம் கிளம்ப இருக்கோ தெரியல CASHLESS வர்த்தகத்தில் குடிமகன்களின் CASH LOSS ஆகாமல் இருந்தால் சரிதான்

About Author

error: Content is protected !!