March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சென்னையில் இன்று  தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி , அதிமுக  ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான                   ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில்   நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் எஸ் கே எம் சிவகுமார் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் தருவை காமராஜூம் விலகி அதிமுகவில் இணைந்து கொண்டார்

                                                                     மேலும் ராஜபாண்டி போர்படை மாநில துணைத்தலைவர் கதிரவன் ரோச், நெல்லை மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவர் சிவன் பாண்டியன், ராதாபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் இளங்கவி, ராஜீவ் ,பஞ்சாயத்து சங்க ஒருங்கிணைப்பாளர் தருவை கமலநாதன், இளைஞர் காங்கிரஸ் நத்தம் முத்து, வண்ணை சாம் ஆகியோரும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உடனிருந்தார்.

நெல்லை காங்கிரஸ் கட்சியில் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த இவர் மிகுந்த செல்வாக்கு மிக்கவர் அண்மையில் நடைபெற்ற நாங்குநேரி இடைதேர்தலின் போது காங்கிரஸ் நாங்குநேரியில் தனித்துப் போட்டியிடும் என இவர் தீர்மானம் நிறைவேற்றியதாக சொல்லப்பட்டது , இது குறித்து காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது குறிப்படத்தக்கது

About Author

error: Content is protected !!