February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கசவனம்பட்டி

கவலைகளை துறக்க கசவனம்பட்டி செல்லுங்கள்

நாள் தோறும் நமது ஜோதிடர் பிரேம்சந்த்_நம்பிராஜன் அவர்களிடம் சந்தேகங்கள் கேட்டு பலரும் கேள்விகள் அனுப்பிக் கொண்டே உள்ளனர், அவர்களும் பதில் அளித்த வண்ணம் உள்ளார்கள் , எல்லா தீர்வுகளுக்கும் இங்கே பதில் சொல்ல இயலாது சில கேள்விகள் அவரை தொடர்பு கொண்டு கேளுங்கள் அவரின் முகவரியில் இரண்டாவதாக உள்ள எண்ணில் கேளுங்கள் எல்லாம் இலவசமாக எதிர்பார்க்க வேண்டாம், சில ராசிகளுக்கு இலவசமாக எதையும் வாங்க கூடாது என்று கூட உள்ளது , உங்களின் தனிப்பட்ட பலன்களை உரிய கட்டணம் செலுத்தி பாருங்கள் நன்றி கவலைகள் பறந்தோடி விடும் இங்கே செல்லுங்கள் என்கிறார் நமது ஜோதிடர்

ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு அனுபவம் கசவனம்பட்டி மெளனகுரு சித்தர் சுவாமிகள் தரிசனம் இந்த தடவை பழநி
பாதயாத்திரையில் தரிசனம் செய்த பொழுது கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் நந்தியம்பெருமாள் மீது சனீஸ்வர பகவான் வாகனமாக கருதினால் அப்படியே ஆகட்டும் காகபுஜண்டர் என்று நினைத்தாலும் அப்படியே ஆகட்டும்.மொத்தத்தில் அடியேனின் உள்ளுணர்வு அங்கே நிறைய விஷயங்களை கண்டுணர்ந்தது.பொதுவாகவே சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு எங்கிருந்தாலும் இந்த கர்மபிறப்பை அழைத்து விடும்.

கசவனம்பட்டி

அது என்னவோ விட்ட குறை தொட்ட குறை.இன்னும் பல கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தான் நாம் இருக்கின்றோம்.நாங்கள் சென்ற பொழுது முத்தனாம்பட்டி விலக்கிலிருந்து கசவனம்பட்டி செல்ல பேருந்து எதுவும் கிடைக்கவில்லை.சரி யாரிடமாவது உதவி கேட்டு செல்லலாம் என்று சுவாமியை மனதில் நினைத்து கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தேன்.அப்பொழுது ஒருவர் நேரடியாக வந்து கசவனம்பட்டி எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டார் புல்லட்டில்.நானும் அங்கேதான் செல்கின்றேன் என்றேன்.உடனே நீங்கள் எனக்கு வழிதுணையாக வர முடியுமா என்று கேட்டார்.ஒரு கணம் சற்குருநாதர் ஆசீர்வாதம் அற்புதத்தை கொடுத்தது என்று மனதில் எண்ணிக் கொண்டே அவருடன் பயணித்தேன் அதன் பிறகு என்னுடன் வந்தவர்களுக்கும் ஒரு ஷேர் ஆட்டோ கிடைத்து அவர்கள் பின்னாடி வந்து சேர்ந்தார்கள்.நான் சென்ற பொழுது காகம் நந்தியம்பெருமான் மீது அமர்ந்து இருந்தது.ஏதோ ஒரு சேதி நமக்காக குருமார்கள் சொல்வார்கள் அதில் இதுவும் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.கசவனம்பட்டி சுவாமிகள் கணக்கம்பட்டி சுவாமிகள் பாட்டி சித்தர் இப்படி சித்தபெருமக்கள் அனைவருமே துணையாக இருப்பதே இந்த மானிட பிறப்பு.கசவனம்பட்டியார் எப்பொழுதுமே அவதத்தராக இருப்பார் நிர்வாணமாக இருப்பது என்று அர்த்தமாகும் பிறந்த குழந்தைகளும் அப்படித்தானே இருக்கும்.சித்தர்களில் ஒவ்வொரு அவதாரமும் உங்களுக்கு நிறைய விஷயங்களை உணர்த்துவார்கள்.இவர்களின் தரிசனம் உங்களுக்கு கிடைத்து விட்டால் உங்களின் கர்மபிறப்பு வினைகளை கழிக்கும் வழி எளிதில் புலப்படும்.நான் பொதுவாகவே பரிகாரங்களுக்கும் சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு சொல்வதுண்டு.ஏனெனில் இவர்களின் ஜீவகாந்த பேராற்றல் அந்த மண்ணில் நிலைத்து இருக்கும்.எம்மை நிறைய விஷயங்களில் வழிநடத்துபவர்கள் சித்தபெருமக்கள்தான்.என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் வேதனைகள் எல்லாவற்றையும் துடைத்தவர்கள் என் குருமார்கள்.என்னுடைய வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்களையும் அதிசயங்களையும் இன்று வரைக்கும் காண வைத்தவர்கள் சித்தபெருமக்கள்.பலதடவைகளில் எமக்கு வந்த எல்லா இன்னல்களையும் நீக்கியவர்கள்.இன்றைக்கும் நிறைய பேருக்கு இவன் ஒரு புரியாத புதிராகவே இருப்பவன்.இவனுக்கு உள்ளுணர்வு என்ற ஒன்று வேலை செய்ய ஆரம்பித்ததே இவர்களால்தான்.எங்கே சென்றாலும் அங்கே ஒரு குறிப்பு தருவார்கள்.முதலில் எனக்கு அது மிரட்சியாகவே இருந்தது.அதன் பிறகே இவனின் கர்மபிறப்பு இதற்காகவே என்பதை உணர்த்தியுள்ளார்கள்.எல்லோரையும் போல மிகவும் யான் ஒரு சாதாரணன்தான்.இன்று நற்பவி என்ற வார்த்தையை மட்டுமே சொல்லி நிறைய பேருக்கு பிரச்சினைகளை அவர்களே சரி செய்யும் வித்தையை காகபுஜண்டர் அருளினார் என்று நம்புவதால் தான் அது அப்படியே நடக்கிறது.கசவனம்பட்டியில் நிறைய அற்புதங்கள் உள்ளது.அவர் தரிசனம் செய்த பிறகு உங்களுடன் அவர் வந்து விடுவார் உங்களுக்கு அவரின் காட்சி அடிக்கடி ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்கும்.இன்றைக்கு நமக்கு என்று ஒரு தளத்தை அமைத்து கொடுத்தவர்கள் நம் சித்தபெருமக்களே என்று நம்புவன் யான்.நம்பினால் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு.இப்பொழுதெல்லாம் எதையுமே தேடி செல்வதில்லை எல்லாமே தேடி வருகின்றது.ஜோதிடத்துறைக்குள் வந்து குறுகிய காலத்திலேயே நமக்கு என்று ஒரு இடத்தை தந்த சித்தபெருமக்கள் அருள் என்றும் நிறைவுடன்.பொதுவாகவே நிறைய பேர் உனக்குள் தேடு என்பார்கள் எனக்குள் தேடியே இவர்கள் அனைவரும் அங்கே வரவழைக்கிறார்கள்.நான் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்தை பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அதை பகிர்ந்து விடுவேன்.அப்படித்தான் நாம் சொல்லும் பரிகாரங்களும் பலன்களும்.சித்தர்களின் வழிபாடு உங்களின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும்.கசவனம்பட்டி திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் முத்தனாம்பட்டி விலக்கில் இருந்து உள்ளே 5கிலோமீட்டரில் உள்ளது.இதை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள் முக்கியமாக இந்த பதிவுகளை பகிர்பவர்கள் கசவனம்பட்டியார் தரிசனம் காண்பார்கள்.காப்பி பேஸ்ட் செய்து கர்மத்தை அதிகரித்து விடாதீர்கள்.ஒருவரின் பதிவை திருடி தன் பதிவாக வெளியிடுவது யார் குழந்தைக்கோ தன் இனிஷியல் போடுவது போல என்று நமக்கு தெரிந்த வாத்தியார் சொல்வதுண்டு.ஆனாலும் திருட்டு என்பது உலகத்தில் இருக்கும்.திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

#பிரேம்சந்த்_நம்பிராஜன்.திரும்பவும் அங்கிருந்து வருவதற்கு வண்டி சற்குருவின் அருளால் கிடைத்தது.கசவனம்பட்டி செல்லுங்கள் கவலைகளை துறங்கள்.

ஜோதிடர் முகவரி

About Author

error: Content is protected !!