June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கள்ளக்காதல் ஆசையில் கணவனை கொன்ற மனைவி

சேலத்தில் கள்ளக் காதலனுடன் சேர்ந்துகணவன் தலையில் குழவிக் கல்லை போட்டு கொன்றுவிட்டுமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் கொலை செய்ததாகக் கூறி நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்

எடப்பாடி அருகே உள்ள ஒருவாப்பட்டி தென்பொதியான் வளவு பகுதியை சேர்ந்தவர் படவெட்டி

இவருக்கு நளா என்கிற மனைவியும் 15 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, நளா குழந்தைகளுடன் ஜலகண்டாபுரம் அடுத்த ஆவடத்தூர் ராஜா கோவில் வளவு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்- மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு, படவெட்டி மனைவியுடன் வசித்து வந்துள்ளார்

இந்நிலையில், தலையில் பலத்த காயங்களுடன், அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு வந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணவர் படவெட்டி தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயன்றதால், அவரது தலையில் குழவிக்கல்லை போட்டு மகள் கொலை செய்ததாக நளா தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் தந்தையை கொன்றதாக மகளும் வாக்குமூலம் அளித்துள்ளார்

ஆனால், இதில் போலீசாருக்கு சந்தேகம் எழவே நளா குடும்பத்தாரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு தாயும், மகளும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விசாரணையை இறுக்கியதில், நளாவும் அவரது கள்ளக்காதலன் ரங்கசாமி என்பவனும் சேர்ந்து தான் படவெட்டியை கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது

மேலும், பாலியல் தொல்லை அளித்ததால் தந்தையை கொன்றதாக கூறி பழியை ஏற்றுக்கொண்டால், கருணை மற்றும் தற்காப்பு அடிப்படையில் விடுதலை செய்து விடுவார்கள் எனக் கூறி, பெற்ற தாயே சிறுமியை மூளைசலவை செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததும் அம்பலமானது

இதையடுத்து சிறுமியை விடுவித்த போலீசார் உடனடியாக செயல்பட்டு ரங்கசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக, நளாவின் அக்காள் மகளை திருமணம் செய்துள்ளவர் தான் இந்த ரங்கசாமி என தெரிய வந்துள்ளது.

About Author

You may have missed

error: Content is protected !!