February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கலைஞர் பிறந்தநாள் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 96வது பிறந்த நாள் வருகிற 3-ஆம் தேதி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று திமுக நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் ஆய்க்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துனை செயலாளர் ஆயான் நடராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் கோமதிநாயகம், சேகனா, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், வார்டு செயலாளர் மோகன், வடகரை ராமர் உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!