June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கர்மவினை தீர என்ன செய்ய வேண்டும்

கர்மவினைகள் தீர என்ன செய்ய வேண்டும் சொல்கிறார் ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன்

காசியில் போய் பிச்சை எடுத்தல் கர்மவினைகள் தாக்கத்தை குறைக்கும் நீக்கும்.இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.சிவபெருமான் பிரம்மனின் தலையை கொய்தததால் அவருடைய கபாலம் சிவனின் கையில் அப்படியே ஒட்டிக் கொண்டது.அதிலிருந்து சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து பித்து பிடித்து அலைந்து திரிந்து தன் இயல்பு சோதனைக்குள்ளாக்கி ஊர் ஊராக பிச்சை எடுத்து திரிய வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.அவரும் கபாலத்தை ஏந்தி எல்லா ஊர்களிலும் இடங்களிலும் பவதி பிக்ஷாம் தேஹி என்று அலைந்து திரிந்தும் பிரம்மன் தலை கொய்த சாபம் விட்டபாடில்லை.கடைசியாக காசிக்கு சென்று அன்னபூரணி அம்மாள் கையிலிருந்து பிச்சை வாங்கிய பிறகுதான் அந்த கபாலம் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்து பிரம்மன் தலை கொய்த சாபம் நீங்கி சிவபெருமான் மீண்டும் தன் சக்திகள் அனைத்தையும் பெற்றார்.அன்னபூரணி அம்பாள் சிலையை அனைவரது வீட்டிலும் வைத்திருப்பார்கள்.அம்பாளின் முன்பு கொஞ்சம் அரிசி போட்டுவைத்திருப்பார்கள்
.

நீங்கள் மாதம் தோறும் வாங்கும் அரிசியில் கொஞ்சம் எடுத்து அம்பாளின் முன்பு வைத்து விட்டு சமையலுக்கு உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.உங்கள் வீட்டில் அன்னபூரணி அம்மாள் வாசம் செய்வாள்.தினமும் சமையல் செய்யும் முன்பு கூட அம்பாளின் அருட்கடாச்சம் பாதத்தில் வைத்து விட்டு சமைப்பதும் சால சிறந்தது.நிறைய பேர் இது போலவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.அன்னபூரணியே அன்னதானத்தில் வாசம் செய்பவள்.ஆதலால் அன்னதானம் செய்வது மிக சிறந்த தானமாகவே நம் சித்தர்கள் கடவுள்கள் குருமார்கள் மகான்கள் ஞானிகள் யோகிகள் சொல்வதுண்டு செய்வதுண்டு.அன்னபூரணி வாசம் செய்யும் வீடு நித்திய அன்னம் நிறைந்த வீடாகும்.அவர்கள் வீட்டில் என்றுமே செல்வத்திற்கு குறைவில்லை இருக்காது.யார் ஒருவர் அதிதியாக உங்கள் வீடு தேடி வருபவருக்கு அன்னதானம் செய்து பாருங்கள் அன்னபாக்கிய வடிவு உங்கள் வீட்டிலேயே குடியேறி விடுவாள்.சிவபெருமானின் சாபத்தை நீக்கிய சர்வ வல்லமை படைத்தவள் தாய் அன்னபூரணி.அன்னம்=சாதம் உணவு வகைகள் பூரணி=பூரணம்=முழுமைத்துவம்=நிறைந்த பொருள் என்று அர்த்தம்.பிச்சை எடுத்தல் என்பதே உங்கள் கருமத்தை சுத்திகரிப்பு செய்து புதிய புனர்ஜென்மம் எடுப்பதற்கான வழி முறையாகும்.பிச்சை எடுக்கும் பொழுது கலங்க கூடாது அசிங்கமாக அவமானமாக கருத கூடாது
கடவுள் சிவபெருமானே தனது கர்மவினையை அகற்ற பிச்சை எடுத்த பொழுது நமக்கு என்ன கஷ்டமா என்ன.ஏனெனில் நீங்கள் பிச்சை எடுக்கும் உங்கள் அகங்காரம் ஆணவம் கர்வம் தலைக்கணம் மமதை கோபம் பொறாமை வக்கிர எண்ணங்கள் அடியோடு அழிந்து விடும்.நீங்கள் பிரம்மத்தை உணர்வீர்கள்.உலக வாழ்க்கையில் எல்லாமே மாயை என்பதை புலப்படுத்தி விடும்.காசியில் பிச்சை எடுத்தல் என்பது சிவபெருமானை நினைத்து செய்யும் காரியங்களாகும்.என்னடா இவன் பிச்சை எடுக்க சொல்கிறானே என்று கேவலமாக எண்ணம் வேண்டாம்.எனக்கே நீண்ட நாட்களாக வருடத்திற்கு ஒரு முறை காசிக்கு சென்று பிச்சை எடுத்து கர்மவினையை அறுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது உண்டு.சனி+கேது இணைவு உள்ளவர்கள் சனி+கேது பார்வை தொடர்பு சனி கேதுவின் நட்சத்திரத்தில் கேது சனியின் நட்சத்திரத்தில் உள்ளவர்கள் சனி திசை கேது திசை புத்தி நடப்பவர்கள் சனியின் நட்சத்திரங்களான அனுஷம் உத்திரட்டாதி பூசம் நட்சத்திரக்காரர்கள் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி மகம் மூலம் நட்சத்திரக்காரர்கள் இந்த பிச்சை எடுத்தல் செய்வது உங்கள் வாழ்வில் கஷ்டமான கிரக சஞ்சாரங்கள் திசை புத்திகள் நடக்கும் பொழுது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.காசிக்கு போய் கருமத்தை தொலை என்பதே இதன் பரிமாணம்தான்.இந்த விஷயங்களையெல்லாம் ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் ஐயா அப்பாவிற்கு சொல்லி அப்பா எங்களிடம் பகிர்ந்ததுண்டு.அப்பா இந்த பரிகாரத்தை காசிக்கு செல்லும் பொழுதெல்லாம் செய்ததாக சொல்லியதும் உண்டு.சில ஜாதக கட்டங்களை பார்க்கும் பொழுது எவ்வளவு பெரிய ஜோதிடரென்றாலும் தலை சுற்றும் அந்தளவிற்கு கர்மாவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.எந்த நல்ல பலன்களும் சொல்ல முடியாத சூழ்நிலை ஜோதிடருக்கே உருவாகும்.காசியை கர்ம பூமியான பாரதத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் கர்மத்தின் வினையை அறுப்பதற்கான காரணமும் அங்கே தான் உள்ளது.கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன் பார்த்திருந்தால் இந்த விஷயம் புரியும்.ஒரு மண்டலத்திற்கு அவர் பிச்சை எடுத்து அடிபட்டு நினைவு தப்பிய அம்மாவின் உயிரையே காப்பாற்றி விடுவார் பிச்சைக்காரனாக வாழ்ந்து காட்டுவார்.பிச்சைக்காரன்=சனி துறவி சாமியார் முனிவர் துறந்தவர்=கேது.சனி+கேது இணைவு உள்ளவர்களுக்கு தொழில் தடைகள் அதிகம் உண்டாகும் தொழிலில் எப்பொழுதும் நஷ்டத்தை சந்திப்பார்கள்.யாருக்கெல்லாம் தொழில் செய்து கடன் ஏற்பட்டு தற்கொலை எண்ணங்கள் மேலோங்கி ஊரை விட்டு ஓடும் எண்ணங்கள் தோன்றுகிறதோ அவர்கள் அனைவரும் இந்த சனி+கேது இணைவு பெற்றவர்கள் தான்.இவர்களுக்கான பரிகாரம் காவி வேட்டி கட்டி பிரம்மச்சாரி வாழ்க்கை வாழ்ந்து தாடி வளர்த்துக் கொண்டு காசியில் பிச்சை எடுத்து அந்த பணத்தில் அன்றைய நாளில் உணவு உண்டு மீதி காசிருந்தால் உண்டியலில் போட்டு விட்டு வந்து விட வேண்டும்.எனக்கு தெரிந்து இந்த விஷயத்தை பற்றி அப்பா சொல்லும் பொழுது இந்தியா நாட்டில் பெரும் கோடிஸ்வரன் ஒருவர் இந்த பரிகாரத்தை காசியில் போய் சென்று விட்டு வருவதை நேரில் பார்த்ததாக சொல்வதுண்டு.மிகப் பெரிய பிரபலமான கோடிஸ்வரன் என்பதால் யார் என்று பெயரை கேட்க வேண்டாம்.அவர் கர்மா அவருக்கு தெரிந்துள்ளது.நிறைய பேருக்கு கர்மா என்றால் என்ன என்று தெரியாமலேயே மீண்டும் மீண்டும் கருமத்தை அனுபவிக்க பிறவி எடுத்து கொண்டேயிருப்பார்கள்.சித்தர்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டால் முக்திக்கான பயணத்தை இந்த ஜென்மத்தில் ஆரம்பித்து விட்டார்கள் அது கண்டிப்பாக ஒரு கருமத்தில் கடவுளை அந்த ஆத்மா விரைவில் அடைந்தே தீரும் என்பதே சர்வநிச்சயம்.பிறவியெடுப்பதே கருமத்தை தொலைத்து கடவுளை அடைவதற்குதான்.ஆனால் நாம் அனைவரும் நான் என்ற மலத்தை உண்டு கொண்டிருக்கும் வரை கருமமும் புலப்படாது கடவுளும் புலப்பட மாட்டார் நான் படித்தேன் நான் செய்தேன் நான் உருவாக்கினேன் நான் சாப்பிட்டேன் நான் சாதித்தேன் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை நானை துறந்தவன் நாதனை அடைவான்.இந்த அன்னபூரணி அம்மாள் புதிதாக குடியேறிய வீட்டில் சமையல்கட்டில் பதிந்து வைத்துள்ளனர்.இந்த வீட்டை வாடகைக்கு வருவதற்கு முன்பே உணர்த்திய கடவுள் குறிப்பு அன்னபூரணி அம்மாள் தான்.எனது தாயாரின் பெயரும் அன்னபாக்கிய வடிவு என்ற பகவதி அம்மாள்.உணவே பிரம்மம் உணர்ந்தே செய் தர்மம் உழைப்பே கருமம்.சித்தர்களே அதனால்தான் நிறைய பேர் பிச்சை எடுப்பது வழக்கம்.எல்லா மகான்கள் சித்த புருஷர்கள் பூமியில் அவதரித்த கடவுள்கள் இதை உணர்த்தியுள்ளார்கள்.ஆதிசங்கரர் இதை நிருபித்து காட்டியுள்ளார் கனகதார ஸ்தோத்திரம் கதையும் அப்படிபட்டதே.ஜோதிடர்கள் அனைவரும் நிறைய பேரின் கர்மாவை தெரிந்தே வாங்குகிறார்கள் அந்த கருமம் உங்களை அதிகம் தாக்காமல் இருக்க நீங்கள் இந்த பிச்சையெடுத்தல் பரிகாரத்தை காசியில் போய் செய்து தொலைக்கலாம்.காசி கால பைரவரின் பூமி அன்னபூரணியின் அரசாட்சி.கால பைரவரே அன்னபூரணி தாயே காசிக்கு என்னை அழைத்து செல்லவும்.பிச்சை எடுக்க வேண்டும் கருமத்தை தொலைத்து கடவுளை காண வேண்டும்.சித்தர்கள்தாசன் சிவனடிமை முருகன் அருள் #பிரேம்சந்த் நம்பிராஜன் செல்லிடப்பேசி 9789168398.திருவோடு ஏந்து திருந்து இதுவேதான் கர்மவினையை தீர்க்கும் உன்னத மருந்து.

ஜோதிடர் முகவரி

About Author

You may have missed

error: Content is protected !!