June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கருவூராரை வழிபடுங்கள் வெற்றி நிச்சயம் -ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன்

 • கருவூரார் சித்தர்
 • ஓம் சற்குருவே சரணம் ஓம் நமசிவாய
  ஓம் கருவூரார் காப்பு இறைவா கருவில் உருக்கொண்ட கருவூரா நமக
 • கருவூரில் பிறந்தவர் கருவூரார் விளையாடும் பருவத்தில் இருந்தே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார் கருவூராரின் பெற்றோர்கள் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்
 • போகர் கருவூராரரே உன் குலதெய்வம் அம்பாள் தினந்தோறும் அவளை வழிபடு அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று உபதேசித்தார் அம்பாளின் வழிபாடுகளை முறைகளை உபதேசித்தார் போகரின் சீடர் கருவூரார்

 • கருவூரார் அம்மனை உள்ளம் உருக வழிபட்டு சித்துக்கள் புரியும் ஞானம் பெற்றார் சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார் கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உண்டு பண்ணி வைத்தார்
 • கருவூர் சித்தரும் திருமளிகைத் தேவரும் போகரின் சீடர்கள்
  இரணியவர்மன் சோழன் தீர்த்த யாத்திரையாக திரும்பிவந்து சிவகங்கை தீர்த்தக் குளத்தில் குளிக்கும்போது தண்ணீருக்குள் ஓங்கார ஓசை கேட்க மீண்டும் நீரில் மூழ்கி நடனத்துடன் கூடிய ஓங்கார ஒளியை உறுதிப்படுத்திக் கொண்டான் தான் கண்ட கேட்ட நடராஜரை அனைவரும் கண்டு களிக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான் இறுதியில் சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி வைக்கலாம் என முடிவு செய்தனர்
 • கலப்படமில்லாத சொக்கத் தங்கத்தில் 48 நாட்களுக்குள் செய்திட சிற்பிகளுக்கு ஆணை பெற வைத்தார் சிற்பிகளால் என்ன செய்தும் குறையின்றி விக்ரகத்தை செய்து முடிக்க முடியவில்லை 47 நாட்கள் ஆனது விபரம் அறிந்த போகர் சிற்பிகள் கஷ்டப்படுவதால் கருவூரார் நீ போய் அதை செய்து முடி என்றார் 48 நாள் முடிவில் சிற்பிகள் தங்கள் இயலாமையால் மரண பயத்துடன் இருக்க கருவூரார் அங்கு சென்றார் அந்த அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டார்
 • நம்பிக்கை இல்லாமல் வெளியில் காத்திருந்த சிற்பிகள் ஒரு மணி நேரத்தில் கதவு திறந்து கருவூரார் வெளியில் வந்து உள்ளே சென்று பாருங்கள் உங்கள் எண்ணப்படியே விக்ரம் செய்தாயிற்று என்றார் நம்ப முடியாத ஆச்சரியத்தில் உள்ளே சென்ற சிற்பிகள் அங்கிருந்து சிலையைப் பார்த்து அதிசயப்பட்டனர்
 • வெளியே வந்து கருவூராரை வணங்கினர்
  மறுநாள் சூரியோதயத்திற்கு முன் நீராடி மன்னர் திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த சிலையின் அற்புத அழகில் மயங்கினார் தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர்ந்தார் சிற்பிகளை பார்த்து அற்புதம் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்க போகிறேன் என்றார் அமைச்சர் சிறையில் இருக்கும் தங்கத்தை சோதித்து பின் விழா எடுக்கலாம் என்றார் கீழே சிதறிக் கிடந்த தங்கத்துகள்களை கொண்டு வந்து சோதனை செய்தபோது மன்னரின் முகம் இருண்டது
 • சுத்தமான தங்கத்தில் செய்யும்படி நான் உங்களிடம் கூறியிருந்தேன் செம்பை கலந்து என்னை மோசடி செய்து விட்டீர்களே என கடுமையாக கேட்டார் சிற்பிகள் பயந்து நடுங்கினர் மன்னா எங்களால் 47 நாட்களாக சிலை செய்ய முடியவில்லை நேற்று அடியார் ஒருவர் வந்தார் அவர் தான் இதைச் செய்தார் என்றதும் மன்னர் திகைத்து அவரை கூட்டி வாருங்கள் என்றார்
 • கருவூராரை அழைத்து வந்ததும் இவரை சிறையில் அடையுங்கள் நான் நாளை என் தீர்ப்பை கூறுகிறேன் என்றார் விக்ரகத்தை தன்னுடன் கொண்டு சென்றார்
  விக்ரகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் நீர் வழிந்தது அவரெதிரே போகர் தோன்றினார் அவர் பின்னால் ஐந்து சீடர்கள் தலையில் தங்க மூட்டையுடன் நின்றிருந்தனர்
 • ஒருவரிடம் சிறிய தராசு இருந்தது ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்து வணங்கினார் மன்னர் மன்னா நீ சிறையில் அடைத்திருக்கும் கருவூரார் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊறுதல் செய்ய தகுதி கொண்ட அவனை சிறையில் அடைத்து விட்டாய் இதுதான் உன் ஆட்சிமுறையா என்றார் மன்னர் சுத்தத் தங்கத்தில் விக்ரம் செய்யச் சொன்னால் செம்பு கலந்து செய்ததால் அந்த தண்டனை என்றார்
 • உடனே போகர் மன்னா சுத்த தங்கத்தில் விக்ரம் செய்ய முடியாது சுத்த தங்கத்திலிருந்து விக்ரம் செய்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி நாளடைவில் பார்ப்பவர் கண்களை குருடாக்கி விடும் எனவே அதில் செம்பு சேர்த்துக் கலக்க சொன்னேன் இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாதா? என்றார்
 • என் மாணவன் செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து செய்திருக்கின்றான் போனது போகட்டும் இந்தா நீ கொடுத்த அதே சொக்கத்தங்கம் சிலையை கொடு என தராசில் நிறுத்தி சிலையை எடுத்துக்கொண்டு செல்ல முயன்ற போகரின் காலில் விழுந்தான் மன்னன்
 • நடராஜப் பெருமானை உங்களிடம் தருகின்றேன் என் சீடனை என்னிடம் கொடுங்கள் என்றார் போகர் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார் கோவில் அமையவேண்டிய முறை எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு வைக்க வேண்டும் எனவும் நடராஜரை எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும் என்றும் சொல்லி மறைந்தார்கருவூரார்
 • கருவூரார் திருவிடைமருதூர் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுக்க இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் தந்தார் தஞ்சை கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் சென்று எளிய அஷ்ட பந்தனம் செய்து கும்பாபிசேகமும் செய்து வைத்தார் தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை அபரஞ்சி என்ற தாசி சந்தித்தாள் வணங்கி வழிபட்டாள்
 • தனது ஞான சாதனையில் தன்னுடைய சந்தேகங்களை சொல்லி விளக்கம் கேட்டால் அவளின் சந்தேகங்களை விளக்கினார் கருவூரார் மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார் விடைபெறுகையில் அவள் வரவே நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என கூறி விடைபெற்றார்
 • மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போய்விட்டது என்ற செய்தி அறிந்தவர்கள் அபரஞ்சி கழுத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர் பஞ்சாயத்து கூடியது பள்ளி கொண்ட பெருமான் சார்பாக கருவூரார் கொடுத்து பரிசு என அபரஞ்சி சொல்ல கருவூரார் எங்கே என்றனர் அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைக்கும் பொழுது அவர் தோன்றினார் அதே சமயம் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் நீங்கள் எனக்கு அலங்காரம் செய்ய நினைக்கின்றீர்கள் நான் என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க விரும்புகிறேன் நான் தான் நவரத்தின மாலையை கருவூரார் மூலம் அளித்தேன் என்று அரங்கன் உரைத்தான் என அசரீரி கேட்க ஊரார் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்
 • அரசு செல்வாக்கும் ஊரார் செல்வாக்கும் கருவூராருக்கு இருப்பதைக் கண்ட அந்தணர்கள் பொறாமையினால் மதுவையும் மாமிசத்தையும் கருவூரார் வீட்டில் ஒளித்து வைத்து மன்னரிடம் கூறினார் கருவூராரின் வீட்டை சோதனையிட்ட காவலர்கள் ஏதுமின்றி வந்தது கண்டு அந்தணர்கள் மீது மன்னன் கோபம் கொண்டான் அவமானமடைந்த அந்தணர்கள் இதனால் கடும் சினம் ஏற்பட அவர்கள் கருவூராரை கொலை செய்ய திட்டமிட்டனர் அதையறிந்த கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்
 • கோயிலுக்குள் ஓடிய கருவூரார் ஆனிலையப்பர் பசுபதீஸ்வரர் எனக்கூறி சிவலிங்கத்தை தழுவினார் இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார் கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டனர் தங்கள் தவறுக்கு பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து வழிபட்டனர்
 • கருவூரார் வாத காவியம் வைத்தியம் யோகம் ஞானம் பல திட்டு குரு நரல் சூத்திரம் பூரண ஞானம் மெய்ச் சுருக்கம் சிவஞான போதம் கற்பவிதி முப்பு சூத்திரம் அஷ்டமாசித்து மாந்திரீகம் ஆகிய நூல்களை எழுதினார்
 • கருவூரார் தியானம் பூஜைக்கு கருவூரில் அவதரித்த மகா ஸ்தபதி திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே வாரி வழங்கி அருள் கொடுத்தாய் மாறாத சித்துடையாய் கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன் கருணைக் கரங்களே காப்பு காப்பு
  தேக சுத்தியுடன் அதற்கென்று உபயோகிக்கக் கூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திருவுருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரி போட்டு ஐந்து முக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பி வைத்து துளசி மற்றும் மல்லிகை மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்
 • அவதார புருஷரே போற்றி கருவூராரை போற்றி
 • இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி
 • ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி
 • ஒளி பொருந்தியவரே போற்றி கற்பூரப் பிரியரே போற்றி
 • சிவனை பூசிப்பவரே போற்றி நடராஜனை பிரதிஷ்ட்டை செய்தவரே போற்றி
 • நாடி யோகியே போற்றி பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி
 • லோக சேம சித்தரே போற்றி வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி
 • ஞானம் அளித்து வேண்டிய வரம் தருபவரே போற்றி
 • கருவூராரை வழிபடும் போது அவருக்கு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை இவற்றுடன் கருநீல வஸ்திரம் வைத்து சனிக்கிழமை வழிபடுவது சிறப்பு
 • தியானம் பூஜைகள் போன்றவற்றை விரும்புபவர் கருவூரார் சனி கிரகத்தை பிரதிபலிப்பவர் இவரை வழிபட்டால் வாகன விபத்துக்கள் அகலும் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும் படிப்பில் உள்ள மந்த நிலை அகலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படும் நிலை மாறும் எலும்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் பிரம்மஹத்தி தோசம் அகலும் புத்திர பாக்கியம் கிடைக்கும் முதலாளி தொழிலாளி பிரச்சினைகள் தீரும்
 • ஓம் ஞானம் அளிக்கும் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி போற்றி இவரின் ஜீவசமாதி ஆனது கரூர் என்ற இடத்தில் உள்ளது அவருக்கு தனி சன்னதி உள்ளது சிவனுடன் இரண்டறக் கலந்து விட்டதால் அது அவரது ஆலயமாக கருதப்படுகிறது சித்தர்கள் பற்றிய ஞானத்தேடல் இருப்பதால் இந்தப் பதிவுகளை எழுதுவதற்கு அவர்கள் அனுமதித்ததால் உலகை ஆளும் கிரகங்கள் அதற்கு வழிவகுத்தது பிரபஞ்சத்தை ஆளும் இறைவன் எம்பெருமான் சிவபெருமான் அடிக்கோடிட்டு முன்னுதாரணமாக இந்த சிறு தொண்டு புரிவதற்கு எமக்கு அளித்த இந்த வாய்ப்புக்கு நன்றிகள் கோடி பிரபஞ்ச சக்தியை நான் தலைவணங்கி மகிழ்வித்து சமர்ப்பிக்கின்றேன் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
 • ⇑#பிரேம்சந்த் நம்பிராஜன் செல்லிடப்பேசி 9789168398
 • ஜோதிடர் முகவரி

About Author

You may have missed

error: Content is protected !!