June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கமல் சர்ச்சைப் பேச்சு கொடும்பாவி எரிப்பு

நான்கு சட்டமன்ற இடைதேர்ததலில் போட்டியிடம் மக்கள் நீதி மைய வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார் அரவக்குறிச்சி தொகுதியில்
கமல்ஹாசன் பிரசாரம் செய்யும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார். மத நல்லிணக்கம், மத ஒற்றுமை பற்றி பேசுகின்றனர். தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று கூறினார். கமல் தனது பேச்சின் போது ஆவேசமாக இதை குறிப்பிட்டார்.இதையடுத்து பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது ,சில அமைப்புகள் அவரின் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில்
நாகர்கோவிலில்இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய கமல் மீது சட்ட வடிக்கை எடுக்க கோரியும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீ ரத்தை ரத்த செய்ய வேண்டும் என வடசேரி சந்திப்பில் இந்து முன்ணனி மற்றும் பிஜேபி கட்சியினர் அவரது உருவபொம்மையை எரித்து ஆர்பாட்டம்.

About Author

error: Content is protected !!