May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கண்ணுபடபோகுதையா திருஷ்டி சுத்திப் போடுங்க

நமக்கு ஏதவாது சிறிய தடங்கள் ஏற்பட்டால் வீட்டில் பெரியவங்க சொல்வாங்க திருஷ்டி சுத்திப் போட சொல்வாங்க ,கல்லடி பட்டாலும் கண்ணடிப் படக்கூடாது என சொல்வாங்க ,  அப்படி  நடக்குமா வாங்க பார்ப்போம்  நம்ம ஜோதிடர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் 

முடிந்தளவு பொதுதளத்தில் உங்கள் குடும்ப படங்களை வெளியிடுவதை தவிருங்கள் முக்கியமாக கணவன் மனைவி சேர்ந்து செல்பி போடுவதெல்லாம் சிறப்பல்ல எல்லா கண்ணும் நல்ல கண்ணல்ல கண்டிப்பாக கண் திருஷ்டி ஏற்படும் எனக்கு தெரிந்த ஒருவர் அடிக்கடி தன் கணவருடன் இருக்கும் படத்தை பைக்கில் போவது போல போடுவதுண்டு இன்று அவர்கள் இருவரும் இணைந்து வாழவில்லை

ஏனெனில் உதாரணமாக திருமணமாகாத ஆண்கள் பெண்கள் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்களை அறியாமலே ஒரு ஏக்கம் ஏற்படும் அதே போல குடும்ப வாழ்க்கையில் பிரிந்து வாழும் தம்பதிகள் அதை பார்க்கும் பொழுது ஏக்கத்துடன் பார்ப்பார்கள் மேலும் அடிக்கடி சண்டையிடும் தம்பதிகள் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்களால் அப்படி இருக்க முடியவில்லை என்ற எண்ணமே வரும் கணவனை மனைவியை இழந்தவர்கள் பார்க்கும் பொழுது இன்னும் அதிகபட்சமாக அவர்களே வருத்தப்படுவார்கள் இதெல்லாம் அவர்களை குறை சொல்ல முடியாது நாம்தான் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சமூகத்தில் நல்ல விஷயங்களை அனுபவிக்க முடியவில்லை என்றாலும் அடுத்தவர்கள் அனுபவிப்பதை பார்க்க நிறைய பேருக்கு பிடிக்காது சில பேர் வாய்விட்டு புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் எனக்கே இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது அதாவது என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒரு தடவை என்னை பார்த்து கூறினார் நீ ஜீன்ஸ் பேண்ட் போட்டு வந்தால் எனக்கு அப்படியே எரிகிறது என்று எனக்கு அவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை இத்தனைக்கும் எனக்கு ரொம்ப நெருக்கமானவர் அதன் பிறகு நான் அங்கு வேலை செய்யும் வரை ஜீன்ஸ் பேண்ட் அணிவதை நிறுத்தி விட்டேன்.

ஏனெனில் அவர் சொன்ன இரண்டொரு நாளில் அந்த ஜீன்ஸ் கிழிந்து விட்டது.அவரை நான் இன்று வரைக்கும் நல்ல நண்பராக பார்க்கின்றேன்.இந்த எண்ணங்களே உங்களுக்கு நீங்களே தேடிக் கொள்ளும் விஷமாகும் எதற்காக நீங்கள் அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து உங்கள் கர்மாவை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும்.அவர்களின் கர்மகட்டமைப்பு அப்படிப்பட்டது.

உங்களால் அடுத்தவரின் சந்தோஷத்தை பார்த்து ஏங்கும் பொழுது ஏன் உங்களால் ஒருவரின் கஷ்டத்தை பார்த்து வருந்த முடியவில்லை அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்ய முடியவில்லை இதுதான் இங்கு சுயநலத்தின் கோட்பாடுகளாகும்(இது பொதுவான விஷயங்கள் தனிப்பட்ட யாரையும் சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் இந்த மாதிரியான எண்ணங்கள் அடியேனுக்கும் இருந்தவைகள்தான் காலப்போக்கில் வாங்கிய அடிகளும் அனுபவங்களும் அப்படி நினைப்பது தவறு என்று உணர்த்தியது).யாருடைய வலியையும் நாம் வாங்க முடியாது நம்முடைய வலியை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.

அவரவர் கர்மா வேறுவேறுவிதமானவை.அதற்காக அடுத்தவன் சந்தோஷப்படுவதை பார்த்து நாம் வருத்தப்படுவது நமக்கு நடக்கவில்லையே என்று ஏங்குவது இதெல்லாம் உங்களுக்கு நீங்கள் செலுத்திக் கொள்ளும் விஷம்தான் அதே போல அடுத்தவன் சங்கடப்படுவதை பார்த்து சந்தோஷப்படுவது இதெல்லாம் இரட்டிப்புத்தனமாக உங்களுக்கே திரும்ப கிடைக்கும்.எப்படி நீங்கள் ஒரு கடவுளாக உங்களை கருதுகிறீர்களோ அதே போல உங்களுக்கு அருகில் எதிரில் சுற்றி இருப்பவர்களும் கடவுள் என்று கருத வேண்டும்

.நம்ம கர்மா இவ்வளவுதான் என்று நினைத்தாலே போதும் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.ஆனால் நாம் நம்ம வீட்டிலே மின்சார தடை ஏற்பட்டால் உடனே பக்கத்து வீட்டில் எரிகிறதா என்று பார்த்து பழக்கப்பட்டவர்கள்தானே இது மனித இயல்பு மனிதனாகவே இருந்து கொண்டிருந்தால் கடைசி வரை பிறவி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.ஓர் உயிருக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தாலே நீங்கள் கடவுளாகி விடுவீர்கள்.அன்பே சிவம்

ஜோதிடர் முகவரி

பிரேம்சந்த் நம்பிராஜன் செல்லிடப்பேசி எண் 9789168398

About Author

error: Content is protected !!