May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கங்கைகொண்டான் துள்ளி ஓடும் புள்ளிமானை ரசிக்க வாட்ச்சிங் டவர்

கங்கைகொண்டான் சரணாலயத்தில் புள்ளி மான்கள் துள்ளி ஓடுவதை ரசிக்க வாட்ச்சிங் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புள்ளி மான்களுக்கு என, அமைக்கப்பட்ட முதல் சரணலாயம் திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் உள்ளது. 700 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் புள்ளி மான்கள்,

கிளை கொம்பு மான்கள், கடமான்கள், முயல், மரநாய், கீரி, முள்ளம்பன்றி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வி லங்குகளும், தேசியபறவையான மயில் உள்ளிட்ட பறவையினங்களும் உள்ளன. இங்கு மாலை 4:00 மணிமுதல் 6:00 மணிவரை புள்ளி மான்கள் துள்ளி ஓடுவதை காணலாம். மான்கள் கூச்சசுவாபம் உள்ளதால் அதனை அருகில் இருந்து ரசிக்க முடியாது.

மான்கள் மற்றும் விலங்குகளின் உணவிற்காக குடைவேல், வெல்வேல், வடதாரம், காரை, ஆவாரம், பிரண்டை, விருவேட்டை , நெல்லி, புளிய மரம் போன்ற தாவரங்கள் மற்றும் புல்வகைகள் 5 ஏக்கரில் உள்ளன.

இங்குள்ள கிணற்றிலிருந்து ஐந்து இடங்களில் விலங்குகள் பருகும் வகையில் தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.




மான்கள் உள்ளிட்ட விலங்குகளின் பாதுகாப்பை பலப்படுத்தும், பார்வையாளர்கள் ரசிக்கவும் ரூ.8 லட்சத்தில் உயரமான வாட்ச்சிங் டவர் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இனி டவரில் ஏறி, மான்களை ரசிக்கலாம்.

,✍️சிவசு

About Author

error: Content is protected !!