June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து, பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உதயமானபோதும், ஐ வகை நிலங்களையும் திருநெல்வேலி தொடர்ந்து தக்க வைத்த பெருமையை பெற்றுள்ளது.

சங்ககால தமிழர்கள், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோர பகுதியையும், வறண்ட பகுதிகளையும் தனி தனியாக அழைத்தனர்.

தொல்காப்பியத்தில் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களை குறிப்பிடுகிறது.

தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் ஆகும். மலையும், மலை சார்ந்த பகுதியை குறிஞ்சி நிலம் என்றும், மலைக்கு அடுத்து இருந்த நிலப்பகுதி காடும் காடு சார்ந்த இடம் முல்லை நிலம் என்றும், முல்லைக்கு அடுத்து இருந்த வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும் குறிப்பிட்டனர். கடல் எல்லையாக இருந்த கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் நிலம் என்றும், பருவ மழை பெய்யாமல் வறண்ட பகுதிகளை பாலை நிலம் என்றும் குறிப்பிட்டனர்.
இந்த ஐ வகை நிலங்களும் ஒரு

சேர, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் 1790ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவான மாவட்டமாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் குறிஞ்சியாகவும், மலை பகுதியையொட்டி வனப்பகுதிகள் முல்லையாகவும், வயலும், வயல் சார்ந்த தாமிரபரணி பகுதிகள் மருதமாகவும், கடற்கரையொட்டியுள்ள பகுதிகள் நெய்தலாகவும், வறட்சியின் பிடியில் உள்ள பகுதிகள் பாலையாகவும் வர்ணிக்கப்பட்டன. இந்த ஐ வகை நிலங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சேர இருப்பது சிறப்பாகும்.
திருநெல்வேலியிலிருந்து 1986ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவானது. தற்போது திருநெல்வேலியை பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உதயமாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான குற்றாலம், கடையநல்லூர், சிவகரி போன்ற குறிஞ்சி மலைப்பகுதிகள் சென்றாலும், மணிமுத்தாறு, பாபநாசம், களக்காடு, அம்பாசமுத்திரம் போன்ற மலைப்பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்கும் வண்ணம் குறிஞ்சி நிலத்தை தக்க வைக்கிறது.
தவிர முல்லை, முருதம், நெய்தல், பாலை பகுதிகளில் வரும் களக்காடு, அம்பை போன்ற வனப்பகுதிகளும், தாமிரபரணியையொட்டியுள்ள வயல்பகுதிகளும், கடற்கரை பகுதிகளான உவரி, பரப்பாடி, கூடங்குளம் போன்ற பகுதிகளும், திசையன்விளை, ராதாபுரம் போன்ற வறட்சியான பகுதிகளும் திருநெல்வேலி மாவட்டத்திலேய தொடரும் வண்ணம் உள்ளது. தென்காசி தனி மாவட்டமாக ஆகியபோதும்,

ஐ வகை நிலங்களையும் திருநெல்வேலி மாவட்டம் தக்க வைத்துள்ளது சிறப்பாகும்.

இருப்பினும் சுற்றுலா தலத்திற்கு பெயர் போன குற்றாலம் இனி தென்காசி மாவட்டத்தில் வருவதால் குற்றாலம் என்னும் அந்தஸ்தை திருநெல்வேலி மாவட்டம் இழந்துள்ளது.

சிவசு

About Author

error: Content is protected !!