May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஏ.டி.எம்., மில் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் பணத்தை எடுப்பது எப்படி?

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம்மில் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் பணத்தை எடுப்பது எப்படி?

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) கடந்த ஆண்டு யோனோ (YONO) சேவையுடன் தனது வாடிக்கையாளர்களுக்காக இதைத் தொடங்கியது. இந்த பயன்பாட்டின் உதவியுடன் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுக்கலாம். இது மிகவும் எளிதானது.மற்றும் பாதுகாப்பானது. தற்போது ஐ சி ஐ சி ஐ வங்கி இந்த நடைமுறைகளை பின்பற்றுகிறது. டெபிட் கார்டுகள் முலம் மோசடி புகார்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வங்கிகள் அட்டை இல்லாத வசதியை வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அனைத்து ஐ சி ஐ சி ஐ வாடிக்கையாளர்களும் நாடுமுழவதும் கிட்டதட்ட 1500 A T M இடங்களில் தங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் பணத்தை எடுக்க முடியும். இந்த சேவையில் உங்கள் ஸ்மார்ட் போண் மற்றும் வங்கியின் ஐமொபைல் (MOBILE) செயலி ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டை எடுத்து செல்ல விரும்பாதபோதோ அல்லது மறந்து விட்டாலோ அத்தகைய சூழ்நிலையில் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.இந்த வசதியின் கீழ் தினசரி பரிவர்த்தனை வரம்பு 20.000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICICI வங்கி ATM மில் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுப்பது எப்படி?

1. ஐமொபைல் (MOBILE) செயலியில் உள்நுழைந்து சேவைகள் மற்றும் ஐ சி ஐ சி ஐ,வங்கி ஏ.டி.எம்மில் பணத்தை திரும்ப பெறுதல் என்பதை தேர்தெடுக்கவும்.

2. தொகையை உள்ளீட்டு பின் உங்கள் அக்கவுண்ட் எண்ணை தேர்ந்தெடுத்து 4 இலக்க தற்காலிக பின்னை உருவாக்கி சமர்ப்பிக்கவும்.

3. நீங்கள் உடனடியாக ஒரு OTP (reference otp ) பெறுவீர்கள்.

4.அதன்பின எதாவதொரு ஐ சி ஐ சி ஐ வங்கி ஏ டி எம்மிற்கு சென்று அட்டை இல்லாத பணத்தை திரும்ப பெறும் ஆப்ஷனை தேர்தெடுக்கவும் அதனை தொடர்ந்து மொபைல் எண்ணை உள்ளீடுக என்பதை தேர்ந்தெடுத்து குறிப்பு O T P எண்ணுக்கு செல்ல வேண்டும். உங்களின் தற்காலிக பின்னை உள்ளீட்டு திரும்ப பெறுவதற்கான தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.

5. பணத்தை திரும்ப பெறுவதற்கான (withdrawl) கோரிக்கை
(request) மற்றும் OTP ஆகியவை அடுத்தநாள் நள்ளிரவு வரை செல்லுபடியாகும் இந்த சேவையில் வேகம் இணைய வேகத்தை பொறுத்து அமையும்.

தகவல் வி.கிருஷ்ணமுர்த்தி.

About Author

You may have missed

error: Content is protected !!