May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் லிமிடெட் என மாறியது ஐடிஎப்சி பேங்க்

உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி (Infrastructure Development Finance Bank|IDFC Bank) மும்பை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக செயல்படும் வங்கியாகும். இவ்வங்கி உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனத்தின் (Infrastructure Development Finance Company) ஒரு அலகாக செயல்படுகிறது.
இவ்வங்கி 19 அக்டோபர் 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் துவக்கி வைக்கப்பட்டது. சூலை 2015-இல் ஐடிஎப்சி வங்கி உலக அளவில் வங்கித் தொழில் தொடங்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளது. 6 நவம்பர் 2015 முதல் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இவ்வங்கியின் பங்குகள் விற்கத் தொடங்கியது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி நிறுவனம் (Infrastructure Development Finance Company) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 9 சூன் 1997 முதல் இயங்கி வருகிறது. 1998 -இல் இந்நிறுவனத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்பட்டது. 1999 முதல் பொது நிதியுதவி நிறுவனமாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் ஒரு அலகான ஐடிஎப்சி வங்கி மத்தியப் பிரதேசத்தில் 23 கிளைகளுடனும் மற்றும் தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புனே சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிலும் செயல்படுகிறது. மக்கள் தொகை 10,000க்கும் குறைவாக உள்ள 15 ஊர்களில் இவ்வங்கியின் கிளைகள் செயல்படுகிறது.


ஐடிஎப்சி வங்கி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்கியது . இந்த இணைப்பு ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்கு காத்திருந்து அதன் அனுமதிகிடைத்துள்ளது
ஐடிஎப்சி வங்கியுடன் கேபிடல் பர்ஸ்ட் இணைந்து புதிய நிறுவனமாக மாறுகிறது. தற்போது ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராஜீவ் லால் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருக்கிறார்கள் . புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக, கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.வைத்தியநாதன் இருகின்றனர் இந்நிலையில் கடந்த டிசம்பர் 18, 2018 ஆம் ஆண்டில் இருந்து ஐடிஎசி வங்கி லிமிடெட் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது
இதையடுத்து ஜனவரி 12 அன்று IDFC FIRST Bank Limited எனதனது லோகோவை மாற்றியுள்ளது

நன்றி விக்கிபீடியா மற்றும் தி இந்து தமிழ் திசை

About Author

error: Content is protected !!