February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி புதிய மாவட்டமாக அறிவிப்பு : மத்திய அரசு ஒப்புதல் இந்த வாட்ஸ் அப் செய்திதான் திருநெல்வேலி தென்காசி மக்களின் ஹாட் டாப்பிக் ,

நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தாெடந்து புதிய மாவட்டம் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடம் தேர்வு செய்யும் பணி, மாவட்டஆட்சியர் மற்றும் ஆணையர் அறிவிப்பு,ஆகியவை நடைபெற்றது.

திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலை பிரிக்கவேண்டும் ,பிரிக்க கூடாது என்று ஒருபிரிவும் கோரிக்கை விடுத்தனர் வை.கோ.வும் சங்கரன்கோவிலை திருநெல்வேலியில் இருந்து பிரிக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார் , இந்நிலையில் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி அண்மையில் கடையடைப்பு கூட நடந்தது , இதே நிலைதான் ஆலங்குளத்திற்கும்

இது இப்படி இருக்க  தென்காசியை புதிய மாவட்டமாக தமிழகஅரசு அறிவித்ததற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தென்காசியில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சிவகிரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் என 6 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் முதல் மாவட்ட ஆட்சியராக அருண்சுந்தர் தயாளன் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது  என வாட்ஸ் அப் தகவல் வர பலருக்கும் குழப்பம்

இதையடுத்து மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம். இதற்கெல்லாம் ஒரு பதில் அளித்தார் அதன் பின்பு தான் இது வதந்தி எனத் தெரியவந்தது இதோ அவர் வெளியிட்ட தகவல்

இன்று தென்காசி புதிய மாவட்டம் குறித்து மத்திய அரசு அனுமதி என்று கூறி, ஒரு இமேஜ் வாட்ஸ் அப்பில் வைரலாக்கப் படுகிறது.

அது விக்கிபீடியா இமேஜ். அதை நேற்று யாரோ திருத்தியிருக்கிறார்கள். அதில், சங்கரன்கோவில் இல்லை. பதிலாக ஆலங்குளம் இடம்பெற்றிருக்கிறது. இந்தத் திருத்தங்களை யார் வேண்டுமானாலும் விக்கிபீடியாவில் மேற்கொள்ளலாம். எனவே இது அதிகாரபூர்வமானதல்ல…

ஒரு மாநிலத்தின் புதிய மாவட்டங்கள் தொடர்பில் மத்திய அரசு அனுமதி (அப்ரூவல்) ஒப்புதல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால், மத்திய அரசுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.

மாவட்டம் உருவாக்குதல், முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்துக்கு, நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசு ஒப்புதல் என்ற வாசகம் தவறானது.

சட்டமன்றத்தில் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படும் தீர்மானம், நிர்வாகத்துக்கு உட்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப் படும். அவர், அதில் கையெழுத்திட்டுத் தருவார்.

மற்றபடி, ஐ.ஏ.எஸ்., நியமனம் தொடர்பில், மாநில அரசே நிர்வாக வசதிக்கு உட்பட்டு, மேற்கொள்ளலாம். கூடுதல் ஐ.ஏ.எஸ்.,கள் தேவைப்படும் போது, மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைக்கலாம்! அது எண்ணிக்கையின் பாற்பட்டது.

 

 

About Author

error: Content is protected !!