June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எஸ். எஸ். எல். சி., க்கு பரிட்சை உண்டுங்க – முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது

தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளதுதமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது – அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்றுவந்துவிடும்,3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன

தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறத, கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு ,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை 2ம் கட்டத்தில்தான் உள்ளது
144 தடையை மீறியவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் ,
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் ,நலவாரிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது, கொரோனா தொற்றின் தக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்
தூய்மை பணியாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.101 கோடி வந்துள்ளது கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தங்களால் இயன்றளவு நிதி வழங்க வேண்டும்

சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்களை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அனைவருக்கும் நாம் துணை நிற்க வேண்டும்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது 10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும்:

About Author

You may have missed

error: Content is protected !!