May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை புறநகர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு மாவட்ட செயலர் பிரபாகரன் அறிக்கை

நெல்லை புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க நிறுவன தலைவரும்மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி. ஆரின் 32 வது ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படவுள்ளதாக புறநகர் மாவட்ட செயலர் கே.ஆர்.பி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:-

அதிமுக நிறுவன தலைவரும், , மறைந்த முன்னாள் முதல்வரும், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 32வது நினைவு தினம் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அனுசரிக்கப்படவுள்ளது. ஒன்றிய, நகர், பேரூர், ஊராட்சி, கிளை, வார்டு பகுதிகளில் எம் ஜி ஆரின் உ ருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டும். நிகழ்ச்சியில் சார்பு அணி அமைப்புகளான எம்.ஜி.ஆர்.மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர்.இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவர் அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தகபிரிவு, கலைப்பிரிவு நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

error: Content is protected !!