June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எதிர்கட்சிகாரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க ? சுத்தமா வையுங்க ஆபிசர்

மாமல்லபுரத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற கடற்கரை கோவில் பகுதியை இந்திய நரேந்திர பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சுற்றிபார்த்து ரசித்தனர் . சீன அதிபருக்கு பிரதமர் மோடி சிற்பங்களை பற்றி எடுத்துரைத்தார் , சீன அதிபருக்கு இந்திய அசைவ உணவுகள் பரிமாரப்பட்டன இருவரும் இளநீர் குடித்தனர் இவையெல்லாம் ஒருபுறம் இருக்க  ஒரு படத்தில்  கவுண்டமணி சொல்வார் எதிர்கட்சிகாரன் பார்த்தா என்ன நினைப்பான் என்று அப்படித்தான் இருக்கிறது நம்ம மாமல்லபுரம்,  பிரதமர் இன்று காலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது 30 நிமிடம் குப்பைகளை அகற்றினார் என்பது செய்தி இதை ஊடகங்களும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது , பல தரப்பிலும் பிரதமருக்கு பாராட்டுக்கள் , சீன அதிபர் இந்தியா வருகையால் மாமல்லபுரமே கழுவி எடுத்த சில்வர் பாத்திரம் போல ஜொலித்தது , கடற்கரை கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இரவே பகலாக இருந்தது , தனியார் இடங் களுக்கு கூட அரசுபணத்தில் பெயிண்ட் அடித்து கொடுத்தனர் , ஆனால் கடற்கரைக்கு நடைபயிற்சி செல்கிறார் என்பது திடீர் முடிவல்ல முன் கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்வாகத்தான் இருக்கும் ,ஒருவேளை திடீர் பயணம் என்றே வைத்துகொள்வோம் , ஒரு நாட்டின் பிரதமரே 30 நிமிடம் குப்பைகளை அகற்றும் அளவுக்கு குப்பைகள் இருக்கு என்றால் அங்கே முகாமிட்டிதிருந்த அதிகாரிகள் என்ன செய்தனர் ,

ஒரு கிராமத்திற்கு சாதாரண அமைச்சர் வருகிறார் என்றால் அவ்வளவு சுத்தமாக ஊர் காட்சியளிக்கிறது ஒரு நாட்டின் அதிபர் என்ன நினைப்பார் , இந்தியாவின் பிரதமரே இறங்கி குப்பைகளை சுத்தம் செய்கிறார் என்று அவர் பெருமை பட்டாலும் , ஒரு பக்கம் பிரதமர் வந்து சுத்தம் செய்கிற அளவுக்கதான் நாடு இருகிறதா என்று பிறர் நினைக்க மாட்டர்களா ? ஒரு நாட்டின் அதிபர் வருகையின் போது இந்த நிலையென்றால் மற்ற நேரங்களில் சுகாதாரம் ? பிரதமர் செய்தார் என பெருமை கொள்ளலாமே தவிர  வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை

About Author

You may have missed

error: Content is protected !!