February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு கடனுதவி

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) தொழில் கடனுக்கு இனி ஆன்லைன் மூலமாகவிண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டதொழில் மையம் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய பல்வேறுகடனுதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்தத் திட்டங்களில் “படித்தவேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)”தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு, அதிகபட்ச மானியமாகரூ.1.25 இலட்சமும் பெறமுடியும். கடன் பெற விரும்பும் தொழில்முனைவோர்கள்http://www.msmeonline.tn.gov.in/uyegp
என்ற இணையதளம் மூலமாக தாங்களாகவே
விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு 175
பயனாளிகளுக்கு ரூ.105 இலட்சம் மானியத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45ஆகவும் (பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் முன்னாள் இராணுவத்தினர்,
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இணையதளத்தில் விண்ணப்பித்து விண்ணப்பத்தின் இரண்டு நகல்களைஉரிய ஆவணங்களுடன்
பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நியூதாமஸ்ரோடு, திருநெல்வேலி – 627011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால்
மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா சதீஸ் பிரபாகர் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!