March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை மதுபாட்டிகள் பறிமுதல்

நாடு முழுவதும் கொரொனோ வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் , இதை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றி வருகின்றன ,மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் எந்த வகையிலும் தடை படாத வண்ணம் அரசு செயல்பட்டு வருகிறது

இந்நிலையில்  தென்காசி மாவட்டம் புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தர்ம ராஜ், யோபு சம்பத்ராஜ் மற்றும் போலீசார் மத்திய,மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை அடுத்து நெல்கட்டும் செவல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஊருக்கு வெளிப்புறத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்ததை பார்த்தனர். இதையடுத்து போலீசாரை கண்டவுடன் மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் அங்கி ருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சட்ட விரோதமாக விற்பனைக்கு இருந்த 400 மது மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அரசின் விதிமுறைகளை மீறி  சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நெற்கட்டும் செவலைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் செல்வம் என்பவரை போலீசார்  தேடி வருகின்றனர்.

About Author

error: Content is protected !!