May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊரடங்குநீட்டிக்கப்பட்டால் மனித வள மீட்சிக்கு மறுபயிற்சி தேவை!-கல்வியாளர் இராஜசேகரன்

ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் மனித வள மீட்சிக்கு மறுபயிற்சி தேவை!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரானா வைரஸ் இந்தியாவையும் பதம் பார்த்து வருகிறது..இந்தியா முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் , சிறு , குறு , நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 1341 மில்லியனாக உள்ளதாக மார்ச் 2020ல் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது..இது இந்திய மொத்த மக்கள்தொகையில் 51.8 சதவிதமாகும். கொரானா தொற்று மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இவர்கள் வாழ்வாதாரத்தில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் 8 சதவித பணியாளர்கள் வறுமைநிலைக்கு தள்ளப்படுவார்கள் என லண்டன் ஆஸ்ஃபம் அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகச்சிறந்த மனிதவள கொள்கைகள்

இந்தியாவின் மிகச்சிறந்த மனித வள கொள்கைகள், விதிமுறைகள், ஒழுக்கநெறிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பாரத தேசத்தின் மக்கள் தொகை 130 கோடி . நம் தேசத்தின் பலவீனமான விஷயத்தை கூட மனித வளத்தை கூர்தீட்டி பலமானதாக மாற்றி விடுகிறார்கள் மனித வள மேம்பாட்டாளர்கள் .நம் மனித வள கொள்கைகள் கள சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.. நல்ல நேர்மறை சிந்தனையோடு பணியாற்றுகின்ற மனப்பான்மையை வளர்க்கிறது . பணியாற்றுகின்ற நிறுவனத்தின் தரம் மற்றும் திறனை மேம்படுத்துவதில் தனிக் கவனம் காண்கின்றனர். பயிற்சி பணிப்பொறுப்பு , திறன் வளர்ச்சி , பணியாளர் நலன் மற்றும் மதிப்பீட்டுடன் அறிவு மூலதனத்தை அதிகரிக்கும் பணியை சிறப்பாக கையாளுகின்றனர் . தற்போதுள்ள ஊரடங்கும் அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தமும் கட்டுக் கோப்பை சிதைத்துவிடுமோ என அஞ்சுகின்றனர் மனித வள மேம்பாட்டாளர்கள்.

மணம் பரப்பும் மனிதவளம்

உலக அரங்கில் அமெரிக்க மென்பொருள் உற்பத்தி நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் தொழில்முனைவோர் மாநாட்டில் தென்னிந்திய தொழில்நிறுவன அதிகாரிகளும் பணியாளர்களும் புத்தி கூர்மை உள்ளவர்கள் என பாராட்டி உள்ளார். உலக முன்னணி நிறுவனங்கள் தமது நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க துடிக்கிறார்கள். நமது பணியாளர்களின் வற்றாத அறிவாற்றலும் சிந்தித்து உழைக்கக்கூடிய மனவலிமையுமே அதற்கு காரணம். .நாடு போற்றும் நல்ல மனித வளத்தை தமிழகத்தில் மணம் பரப்பி இந்தியாவில் அதிக மனிதவள குறியீடு கொண்ட மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது..இந்த புகழுக்கு சொந்தம் கொண்டாட நம் மனிதவள மேம்பாட்டாளர்களே தகுதி படைத்தவர்கள். மனித வள மேம்பாட்டாளர்கள் மாதமொருமுறை பயிலரங்கம் – கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆற்றலை புதுப்பித்து பணியாளர்களை மெருகேற்றுவர். அரசின் சட்டதிட்டங்களை தன் நிறுவனத்தில் நிலைநாட்ட அரசு துறைகளோடு அன்பு காட்டி பயணிப்பர் . தமிழத்தில் அயல்நாட்டு முதலீடுகள் 1 லட்சம் கோடிக்கு மேல் குவிவதற்க்கு நம் மனித வளமும் முக்கிய காரணம்

மன இறுக்கத்துடன் – மனித வள மேம்பாட்டாளர்கள்

இந்தியா முழுவதும் குறிப்பாக தான் பணியாற்றுகின்ற நிறுவனத்தில் மனித வள அறிஞர்கள் , கொரானா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கும்பட்சத்தில் ஏற்பட உள்ள சிரமங்கள் குறித்து ஆராயத் தொடங்கி உள்ளார்கள்.. கடின உழைப்பால் , தொடர் பயிற்சியால் ஊழியர்களை தம் நிறுவன மதிப்புமிகு சொத்தாக உருவாக்கி உள்ளோம். நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்த ஊழியர்கள் பெரும்பங்களிப்பை வழங்கி உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பால் பணியாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வாழ்வாதார பிரச்சனை மனித வள சிதறலை ஏற்படுத்துமோ என அஞ்சுகின்றனர்.

கட்டுக்கோப்பு காக்கப்பட வேண்டும்

பணியாளர் நிர்வாகம், உயர்திறன் செயல்முறைகளை வகுத்து ஊழியர்களை வல்லவர்களாக மாற்றி உள்ளோம். வெற்றிகரமான திரள்களின் தொகுப்பாக உயர்த்தி தரவுகளை சேகரித்து , சேமித்து , மேலாண்மை செய்து வந்த நிலையில் கொரானா தொற்று ஏற்படுத்திய இடைவெளி கவலையடைய செய்துள்ளது. பணி இடைவெளிக்குப் பின் உளவியல்ரீதியாக , பணியாளர்களை உறுதியுடன் பணியில் உன்னத பயிற்சியளித்து சந்திக்கும் பிரச்சனைகளை தவிர்த்து , மதீப்பீடு – கண்காணிப்மை மேம்படுத்தி பணியாளர்- நிறுவன உறவுகளை மேம்படுத்தகட்டுக்கோப்புடன் கட்டமைக்கின்ற செயல் திட்டங்களை வகுக்கத் தொடங்கி விட்டனர் மனிதவள விற்பன்னர்கள்.

வாழ்வாதார கவலை

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிலும் பெரிய நிறுவனங்களில் பணிக்கு முந்தைய பயிற்சியில் இருக்கும் மனித வள பிரம்மாக்களுக்கு சுய கவலை மனதில் தொற்றிக்கொள்ள தொடங்கியிருக்கிறது.. மாதாந்திர வீட்டு வாடகை அல்லது வங்கி EMI குழந்தைகள் கல்விச் செலவு , குடும்ப பராமரிப்பு , அவசரகால செலவுகள் என மனதை வாட்டுகிறது.. ஊரடங்கு நீட்டிப்பால் நிறுவன உற்பத்தி மேலும் முடங்கினால் சுயதேவைகளை சமாளிக்கும் வாழ்வாதார கவலையும் வாட்டத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் ஒட்டுமொத்த நிறுவனமும் உற்பத்தியின்றி ஸ்தம்பித்து நிற்பது மனித வள மேம்பாட்டாளர்களின் முகத்தில் புன்முறுவலுக்கு தடைவிதித்துள்ளது.

கல்வியும் நேர்மறை சிந்தனையும்

தமிழக முதலமைச்சருடனான மருத்துவ குழு சந்திப்பும் , இந்திய உள்துறை அமைச்சகமும் மற்றும் சுகாதாரத்துறையின் பரிந்துரைகள் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிகுறிகளாக தெரிகின்றன. தொற்று பரவலை தடுத்து உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்பது உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ பாதுகாப்பு கவுன்சிலின் கட்டாய வலியுறுத்தல். பிரதமர் இன்று மாலை வெளியிட இருக்கும் அறிவிப்பும் இதைத்தொடர்ந்தே இருக்கும் என கணிக்கப்படுகிறது .

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன் பெருந்தலைவர் காமராஜர் ஏற்படுத்திய கல்விப் புரட்சி தமிழக மக்களிடம் நேர்மறை சிந்தனைத் திறனை வளப்படுத்தி உள்ளது.

நம் தமிழக மனித வளம் மீட்சி பெற்று மீண்டும் உச்சத்தை எட்டும்…
மனித வள மேம்பாட்டாளர்கள் புதுமை அறிவுசார் தொழில்நுட்பத்துடன் தடம் பதிப்பார்கள் …..
வெல்லும் பாதையின் வெளிச்சம் விரைவில் தெரியும்…….!!

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன் கல்வியாளர் ,சமூக ஆர்வலர் , மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்டவர்

About Author

error: Content is protected !!