June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

Colorful astrology circle design with horoscope signs isolated on white background. Vector zodiac horoscope astrological illustration

ஊரடங்கு மீட்சி பூகோளரீதியான ஜோதிட பலன் சோபிக்குமா ?கல்வியாளர்இராஜசேகரன்

ஊரடங்குமீட்சிக்கு பூகோளரீதியான ஜோதிட பலன் சோபிக்குமா ?இது குறித்து சமூக ஆர்வலரும் கலவியலருமான க.இராஜசேகரன் என்ன சொல்கிறார் வாங்க பார்ப்போம்

தொடர் ஊரடங்கின் 10வது நாளான இன்று நாடுமுழுவதும்

நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள் கொரானா வீச்சு இன்னும் எவ்வளவு விரியும் அடையும் எத்தனைநாள் தொடரும் என்பதுதான். பாரதப் பிரதமர் மதிப்புமிகு மோடி அவர்களின் முதல் ஊரடங்கு பிரகடனத்தில் அறிவியலும் ஆராய்சியும் நமக்கு கை கொடுக்கவில்லை. தனிமைப்படுத்துதலும் , தவமும் ,ஆன்மிகமும் முக்கியம் என்கிற நிலையே இன்றும் நீடிக்கிறது. புனித, புண்ணிய தலங்களில் சிறப்பு ருத்திர ஹோமம், மிருத்யூஞ்சய் ஹோமம், தன் வந்த்ரி யாகமும் பரவலாக நடத்தப்பட்டு வருகிறது. மத மாச்சரியமின்றி மனங்களை கட்டமைக்கும் மணவளக் கலை மன்றத்தின் ஆலோசகரும் உலக சமுதாய சேவா சங்க தலைவருமான எஸ்.கே.எம்.மைலானந்தம் தினமும் இருமுறை துரியாதீத தவம் செய்து வர பிரச்சனையும் பிணக்கும் குறையும் என்கிறார்.

சோதிட சாஸ்திரம்

ஆன்மிகம் ,அறிவியல் , ஆராய்ச்சி தாண்டி இந்தியா முழுமையும் 80 சதவித மக்கள் நடைமுறை நம்பிக்கையோடு கடைபிடிக்கும் ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை அறிய விருதுநகர் பிரபல ஜோதிடர் பரணி சுந்தர் தொடர்பில் வந்தார். தொலைபேசி உரையாடலில் அவர் தந்த நம்பிக்கை தகவல்கள் உங்களுக்காக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் ஜென்ம ராசி

உலக நாடுகள் ஜோதிடத்தை அறிவியல் அணுகுமுறையோடு கையாண்டு ஜென்ம ராசியை ஆராய்ந்து பலன்கள் கணிக்கப்பட்டு வருகிறது . இந்திய தேசத்தின் ஜென்ம ராசியாக மகரராசி என அறியப்பட்டுள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி நம் நாட்டின் ராசி அமைப்பின்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து , மகர ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இது சனி பகவானின் சொந்த வீடு. இந்த வீட்டில் அவர் ஆட்சி பலம் பெற்றுள்ளார். கடந்த மார்ச் 23ம் தேதி இரவு 12.40 மணிக்கு செவ்வாயும் அதே வீட்டில் குடிபுகுந்தார். இந்த இடம் உச்சம் பெற்று பலமடைந்ததால் நாட்டுக்கான நல்ல சூழ்நிலைகெட்டு வலு இழந்தது .இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் நாட்டில் போர் மேகம் சூழ்ந்து இழப்புகள் ஏற்படும். இப்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் மோதும் போர்களமாக இந்தியா காட்சியளிக்கிறது. தற்போது மிதுனராசியில் ராகுவும் தனுசு ராசியில் கேதுவும் அவர்களது சுய அல்லது சொந்த நட்சத்திரத்தில் நிலை கொண்டுள்ளனர்.

அதிர்வு தந்த காலம்

மிதுனம் காற்று சம்பந்தமான ராசியாவதல் அது உச்சம் பெற்ற நேரத்தில் ராகுவின் ஆதிக்கமும் அரங்கேறியது. பஞ்சபூதங்களில் காற்றுக்கு அதிபதியான ராகு தொட்டாலும் , தும்மினாலும் கண்ணுக்கு தெரியாமல் காற்றில் கரைப்பதே ராகுபகவானின் அலாதியான செயல். இதன் தாக்கமே அரசாங்கம் ,ஆட்சியாளர்கள் , மக்கள் என கடும் பயத்துடன் பீதியில் ஊரடங்குக்கு உள்ளானார்கள்.

தாக்கம் தணியும் காலம்

கடந்த 29ம் தேதி பின்னிரவு 3.24 நிமித்தில் குருபகவான் அதிர சாரமாக மகர ராசிக்குள் ஐக்கியமாகி உள்ளார். ஏற்கனவே அந்த வீட்டில் சனியும் செவ்வாயும் சஞ்சரிப்பதால் இந்தியாவிற்கான பாதுகாப்பான அறிகுறி தென்பட தொடங்கி விட்டது. பயம் குறையும் தன்னம்பிக்கை பெருகும். ஆட்சியாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள். தொற்று சங்கிலி உடையும் கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களும் தற்போது தனிமைபடுத்தப்பட்டவர்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பட்டியலை மட்டுமே அரசு வெளியிடும். முழுக்க முழுக்க ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களே பெரும்பாலும் இடம்பெறுவார் . புதிய கொரானா நோயாளிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தென்படுவார்கள்.

யார் யார் கவனமாக இருக்க வேண்டும்

மானிடத்தில் கால சுழற்சியால் தனி மனித ஆயுளை கணக்கிடும் 12 ராசிகளில் இந்த இடர் சூழ்ந்த காலத்தில் மிதுனம் , மகரம் , கடகம் , தனுச ராசிக்காரர்களுக்கு ஜோதிடம் எச்சரிக்கிறது. அதிலும் மிதுனம் , மகரம் பயணத்தை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்திக்கான மூலிகை வைத்தியமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். சளி இருமல் காய்ச்சல் அண்டாத வண்ணம் ஆரோக்கிய பராமரிப்பில் ஈடுபட வேண்டும்.

அரசின் அறிவிப்பு

ஏப்ரல் 10ம் தேதி வாக்கில் அபாய கட்டத்தை தாண்டி புதிய வைரஸ் சமூக பரவல் இன்றி , வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் பட்டியலை அரசு வெளியிடும். பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு நிறைவடையும் நிலை ஏற்படும்.மீண்டும் பரவல் சந்தேகத்துடன் பாதுகாப்பு கருதி மத்திய அரசு ஊரடங்கை நீடிக்க நினைத்தாலும் ஒட்டுமொத்தமாக அதிகமாக பாதிக்கப்பட்ட சில இடங்களில் மட்டும் ஊரடங்கை தொடர வேண்டிய நிலை வரலாம் . மே மாதம் 3ம் தேதியுடன் முழுமையாக கொரானா வைரஸ் பிடியிலிருந்து இந்தியா மீண்டுவிடும்.

பொருளாதார நிலை

இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சம் தொடும். விலைவாசி உயரும் , உணவுப்பொருள் பற்றாக்குறையும் பணத்தட்டுப்பாடும் தற்காலிகமாக நிலைகொள்ளும். மத்திய ,மாநில அரசுகளின் முழுக்கவனமும் சுகாதார விஷயங்கள் சார்ந்ததாக இருக்கும். அரசின் பெருவாரியான நிதி சுகாதார நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் .அடுத்த 48 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என ஜோதிட நம்பிக்கையை விதைத்தார். அன்றாடப்பணிகளை கூட ஜோதிடர்களின் ஆலோசனைகளுடன் திட்டமிடும் அரசியல் மற்றும் அதிகார சக்திகளின் நம்பிக்கைக்கு மத்தியில் பூகோள ரீதியிலான ஜோதிடம் பலிக்குமா? மக்கள் சோபிப்பார்களா என்பதை அடுத்தடுத்து நாட்கள் நகர்வதை வைத்தே நிம்மதி பெற முடியும். ஆறுதலோடு அமைதி காப்போம்

கல்வியாளர் ஜா.இராஜசேகரன்.

திரு,ஜா.இராஜசேகரன் கல்வியாளர், சமூக ஆர்வலர் ,மனித வள மேம்பாட்டு ஆலோசகர் ,மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து அதன் மூலம் நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என தீராத ஆர்வம் கொண்டவர்

About Author

You may have missed

error: Content is protected !!