May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊரடங்கு என்றாலும் ஓய்வில்லாமல் உழைக்கும் எம். எல். ஏ இன்பதுரை

சுழலும் சூறாவளி – ராதாபுரம் எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் ஊரடங்கு உத்தரவில் தொகுதி முழுவதும் சூறாவளி போல் சுழன்று வருகிறார் என்றால் அது மிகையாகாது.

திருக்குறளில்

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.”

என்ற குறள் உள்ளது. அதாவது அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

இதில் ஒன்று கூட குறையாதவர் தான் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை என்று சொல்கின்றனர் தொகுதி மக்கள்

கொரானாவினால் ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்காமல், மக்கள் நலனை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி , கொரோனா வராமல் தடுக்கும் பொருட்டு முககவசம் வழங்கல் , அனைத்து ஊர்களிலும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிதல் , நோய் வந்து பாதித்த நபரை சந்தித்து ஊக்கம் கொடுத்தது என்று சூறாவளி போன்று சுழன்று பணியாற்றி வரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை தமிழகத்தின் தலைசிறந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற கர்வம் தொகுதிகாரன் என்ற முறையில் எங்களுக்கு உண்டு என்கிறார் ராதாபுரம் தொகுதி வாசிகள்
செய்தியாளர்
நெல்லை
டேவிட்

About Author

error: Content is protected !!