May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊரடங்கு அணுகுமுறை நூறு மதிப்பெண்களுடன் இந்தியா முதலிடம்

நாட்டுக்கும் வீட்டுக்கும் ஊரடங்கு தந்த பாடம் !

மத்திய அரசு அறிவித்த நாடு தழுவிய முதல் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் தொற்றுநோய் பயத்தையும் , கடும் பொருளாதார சரிவையும் தாண்டி நாட்டுக்கும் வீட்டுக்கும் நிறைய புதிய பாடங்களை கொரானா கற்பித்துள்ளது. இரண்டாவது கட்ட ஸ்மார்ட் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் , முதல் கட்ட பாதுகாப்பால் தேசமெங்கும் பேசப்படும் பாதுகாப்பு மற்றும் மனங்களின் புரிதல் மாற்றங்கள் குறித்து இக்கட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது.

நூறு மதிப்பெண்களுடன் இந்தியா முதலிடம்

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஊரடங்கின்போது இந்தியா கடைபிடித்த நடைமுறைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பாராட்டுதலுடன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை வழங்கி உள்ளது. இந்தியாவின் தைரியமான நடவடிக்கைகளால் ஊரடங்கின் முதல் அறிவிப்பாக கல்வி நிறுவனங்கள் மூடல் , பயணத் தடை , நிதிமேலாண்மை , சுகாதாரத்துறையின் சீற்றமான பணி , பொது நிகழ்ச்சிகள் ரத்து , விழிப்புணர்வு பிரச்சாரம் , தொடர் பரிசோதனை , தொற்றுநோயாளியின் தொடர் அறிதல் என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அதிகார பகிர்வுடன் கடுமையாக்கப்பட்டன. இதனால் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா , ஜெர்மனி , இங்கிலாந்து , ஸ்பெயின் நாடுகளை பின்னுக்கு தள்ளி கொரானா ஒழிப்பு போரில் , உயிர் பாதுகாப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

கட்டுக்குள் சமூகப் பரவல்

உலக பயண வரலாறு மூலம் நம் தேசத்தில் தடம்பதித்த கொரானா அவை சார்ந்தவர்களோடு உள்வட்ட பரவலோடு இரண்டாம்நிலையிலேயே தொற்று உறுதி எண்ணிக்கையை மெல்ல உயர்த்தி வருகிறது. கடின கட்டுப்பாடுகளால் அறிகுறியோடு தென்படுபவர்கள் மருத்துவப் பாதுகாப்போடு சிகிச்சைக்கு உட்படுத்துவதால் உயிரிழப்பு கட்டுக்குள் உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வசிப்பிடம் அறிந்து கடந்த கால தொடர்புகளை தடமறிந்து அந்த பகுதியையே நகர்வின்றி அடைத்து விடுவதால் சமூகத் தொற்றாக மாறாமல் உள்வட்ட பரவலிலேயே 21 நாட்களை கடந்து விட்டோம்.

உலக சுகாதார அமைப்பின்
பாராட்டு

ஊரடங்கை அமல்படுத்தி 130 கோடி மக்களும் 21 நாட்கள் தனிமை புரட்சி நடத்தியதால் முடிவுகள் வெற்றிப் பாதையை கோடிட தொடங்கி உள்ளது..நாம் அலட்சியமாக பயணித்திருந்தால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆய்வு புள்ளிவிவரப்படி நோய்தொற்றில் இதுவரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். சமூக தொற்றாக மாறி இந்திய அமைதிக்கு பங்கம் விளைவத்திருக்கும் என அந்த அறிக்கை சூசகமாக தெரிவிக்கிறது. பொதுச்சுகாதார சேவை, பரவல் தடுப்பு, பொது இடங்களில் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் சில காலம் மத்திய – மாநில அரசுகள் கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் தன்மை

ஆரம்ப கட்டத்தில் வைரஸ் தும்மல் இருமல் , சளி , காய்சல் , மூச்சுத்திணரல் அறிகுறிகளோடு தென்படுவதாக அறிவிக்கப்பட்டது.. அடுத்து தும்மல் , இருமலின் போது வெளிப்படும் திரவ சிதறலில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தனர் . மூன்றாம்நிலையில் பாதித்தவர்களின் மூச்சுக்காற்று பட்டாலே பரவும் என்று எச்சரிக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக கொரான வைரஸை சுமந்து செல்லும் துகள்கள் நீண்ட நேரம் காற்றில் கலந்து பரவுவதாக பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்திலும் ஆதாயம்

உலக அளவில் இந்திய மருந்துகளின் சந்தை விரிவடைந்துள்ளதால் புதிதாக 20 ஆயிரம் கோடிக்கு இந்திய மருந்துகளை அமெரிக்கா வாங்க தொடங்கி உள்ளது..முன்னணி நாடுகள் பல இந்திய மருந்துகளை நாடுவதால் உலக மருந்து சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு உயரும். தற்போதைய பொருளாதார பின்னடைவை சந்திக்க இந்த அந்நிய செலவாணி நமக்கு உதவியாக இருக்கும்.

மாசு படிதல் குறைந்தது.

இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி மாசு 30 சதவிதம் குறைந்து பதிவாகி உள்ளது . பெரும் நகரங்களில் மக்கள் நடமாட்டமின்மை . தொழில் மண்டலங்கள் , வழிபாட்டுத்தலங்கள் , கட்டுமானப்பணிகள் முடங்கியதால் இந்த மாற்றம் . புகையில்லா மேகங்களும் தெளிவான நீலவானமும் கண்களில் பளிச்சிடுகின்றன. புண்ணிய தலங்களில் ஆறுகள் தெளிந்து நீர் புனிதமடைந்துள்ளது.

மங்கிப்போன மதுப்பழக்கம்

இந்தியாவில் மதுப்பழக்கம் குடும்ப கட்டமைப்புகளை சீர்குலைத்து வருகிறது . மது அருந்த பழகியவர்களில் 30 சதவீதம் அடிமைகளாகவும் 70 சதவீதம் பேர் குறைந்த அளவில் குடிக்கும் குணம் கொண்டவர்களாக உள்ளனர். குடிக்க வழியில்லா நிலையில் சில நாட்கள் கோபம் , தலைவலி , உடல் சோர்வால் அவதிபட்டனர். அதில் 50 சதவித மதுப் பிரியர்கள் குடும்பத்தினர் அரவணைப்பிலும் , தொடர் பராமரிப்பிலும் மதுவில் இருந்து விடுபடும் மனமாற்றம் பெற்றிட முடியும் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றம் ஏற்பட்டால் குடும்ப வருமானமும் உடல் ஆரோக்கியமும் காக்கப்படும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர் .

மகிழ்ச்சியில் மங்கையர்கள்

தலைமுறைகள் அறியாத அரிய நிகழ்வாக குடும்பம் குடும்பமாக வெளியில் செல்ல வழியின்றி வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள் 130 கோடி இந்தியர்கள். முதல் முறையாக நீண்ட நாட்கள் கணவர் ,மனைவி , குழந்தைகள் முகம் பார்த்து சிரிப்பதாக றுகர்வோருக்கான தயாரிப்புகளை சந்ததைப் படுத்த சர்வே நடத்தும் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீட்டுப் பணிகளை கண்டும் காணமலிருந்த குடும்ப தலைவர்கள் மனைவின் சிரமத்தை உணர்ந்து நடவடிக்கைகளை ஆண்கள் அன்னியோன்யப்படுத்தி இருக்கிறார்கள். இத்தனை சிரமங்களை தாங்கி பெண்கள் புன்னகைப்பது வரம் என உணர்கிறார்கள் . அன்றாட வீட்டுப் பணிகளில் சமையல் , வீடு பராமரிப்பு , ஆடைகள் சலவை , வீடுகள் துப்பறவு , குழந்தைகள் கவனிப்பு அனைத்திலும் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள். ஆண்களின் அரிதார பங்களிப்பு மங்கையரின மனநிறைவை உச்சம் தொட வைத்துவிட்டது. .

தன்னிலை உணர்தல்

ஆணினத்துக்கு ஊரடங்கு எண்ண ஓட்டத்தை சுயபரிசோதனை செய்து ஆழ்மனதை தட்டி எழுப்பி மனமிரங்கும் மார்க்கத்துக்கு வெளிச்சம் போடச்செய்துள்ளது . ஆடம்பரம் தவிர்த்து , செலவை குறைத்து குடும்பத்தை வழிநடத்தும் எண்ண ஒட்டத்தை தட்டி எழுப்பி உள்ளது. தடாலடி தவிர்த்து தன்னிலை உணரச் செய்துள்ளது. மன இறுக்கம் விடுத்து முகம் பார்த்து மனம் விட்டு பேசுவதை சிமிட்டும் கண்கள் சீராய்வு செய்து அழுத்தத்தை கரைத்து விட்டது. குழந்தைகளின் கேள்விக்கு செவிமடுத்து பதிலளித்துகொண்டாட தொடங்விட்டனர் பெற்றோர்கள். ஆனந்த களிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் குழந்தைகள். குடும்பங்கள் சங்கமித்து புரிதல் கலந்த மனநிறை பயணத்துக்கு தன்னை தயார்படுத்திவிட்டன ….

புதுப்பித்த புத்தியுடன் புதுப்பயணம் – வைரஸ்ஸே வழிவிடு …. !!
இவரின் முந்தைய கட்டுரையை வாசிக்க  https://bit.ly/3cc6dCo

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன்
கல்வியாளர்
சமூகஆர்வலர்
மனிதவள மேம்பட்டு ஆலோசகர்

About Author

error: Content is protected !!