May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஊரகவளர்ச்சி துறை சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா

ஏப்ரல் மாதம் ஊரக வளர்ச்சிதுறை மாநாடு ஊரகவளர்ச்சி துறை சார்பில் ஏப்ரல் மாதம் மாநாடு மற்றும் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சிப் பணியாளர் சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் அமல்ராஜ் கூறியதாவது:
கிராம ஊராட்சிகளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச காலமுறை ஊிதியம், துாய்மை காவலர்களுக்கு தினசரி சம்பளம் , 300 ரூபாய் வழங்குதல், பதவி உயர்வுக்கு தகுதியான ஓவர்சியர் பணியிடங்கள் அனைத்தையும் இளநிலை பொறியாளர் பணியிடங்களாக அப்கிரேடு செய்தல், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் கணிணி உதவியாளர்களுக்கு குறைபாடுகளை களைந்து பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாளை ,16ம் தேதி நடக்கும் மானியகோரிக்கையின் போது நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
தவிர ஏப்ரல் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு   பாராட்டு விழா மற்றும் மாநாடு  நடத்த உள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

About Author

You may have missed

error: Content is protected !!