February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

தென்காசி மாவட்டத்தோடு அடைச்சாணி கிராமத்தை இணைக்க எதிர்ப்பு. உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிக்கப்பட்டது. இந்த பிரிவினையின்போது அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ரங்கசாமிபுரம், பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, இடைகால் ,ஆகிய கிராமங்கள் தென்காசி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அடைச்சாணி தவிர மற்ற கிராமங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடைச்சாணி கிராம மக்கள் தங்களையும் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அடைச்சாணி கிராமமக்கள் ஆலங்குளம் அம்பாசமுத்திரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர் இதனைத் தொடர்ந்து இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பது, மற்றும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.

About Author

error: Content is protected !!