May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நன்றி GETTY IMAGES

இந்திய மருந்துகளின் எல்லை விரிவடைகிறது கல்வியாளர் இராஜசேகரன்

உலக நாடுகளின் பயன்பாட்டில் இந்திய மருந்துகளின் எல்லை விரிவடைகிறது . ஆம்…

இந்திய தயாரிப்பு மருந்துகளால் உலக சந்தையில் கொரானா பாதிப்பில் இருந்து விடுபட சர்வதேச அளவில் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் பரவலை தடுக்க அங்கிகரிக்கப்பட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் இந்த மருந்துகளுக்கு நன்மதிப்பு கிடைத்து உலக நாடுகள் பயன்படுத்த தொடங்கி விட்டன.

நன்றி GETTY IMAGES

ஐசிஎம்ஆர் பரிந்துரை

இந்திய மருத்துவ பாதுகாப்பு கவுன்சில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான இப்கோ லேப்ஸ் , சைடஸ் கேடிலா, வால்லஸ் பார்மா நிறுவனங்கள் தயாரித்த ஹைட்ராக்ஸிகுளோரா குயின் மருந்துகள் கொரானா தொற்றுநோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதாக புதிய ஆராய்ச்சி செய்து முடிவை வெளியிட்டுள்ளது. இந்த மருந்து முடக்குவாதம் மற்றும் மலேரியா தடுப்புக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இதை பயன்படுத்துவதை ஆதரிக்காத ஐசிஎம்ஆர் இப்போது பச்சைக் கொடி காட்டி உள்ளது.

உதவி கேட்ட அமெரிக்கா

கொரானா கொடிய தாக்குதலில் அவதிப்பட்டு வரும் அமெரிக்கா தினமும் 2000க்கு மேற்பட்ட மனித உயிர்களை இழந்து வருகிறது. மேலும் பலர் கொரானா வார்டுகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு சிகிச்சை அளிக்க அங்கே நோய் எதிர்ப்பு மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து கண்டுபிடிக்காத நிலையில் மலேரியா தடுப்புமருந்தான ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் மருந்தை அனுப்ப பாரத பிரதமரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார் .சொந்த நாட்டின் தேவைக்கு இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரதமர் ஏற்றுமதியை தடை செய்திருந்தார்.. அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமருக்கும் , இந்திய மக்களுக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில் மோடியின் வலிமையான தலைமை இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக மனித இனத்துக்கே கொரானா பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது என உலகமே வியக்கும் பாராட்டை தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் வரவேற்பு

தொற்றுப் பிடியில் சிக்கியுள்ள பெரும்பாலான நாடுகள் தங்களுக்கான மருந்து தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவை தொடர்பு கொள்ள தொடங்கி விட்டனர். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நம் இந்திய மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை உட்கொண்டு நலம்பெற்று வருவதாக இங்கிலாந்து நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து ஜெர்மனி , இத்தாலி , ஸ்பெயின் , சீனா , பிரான்ஸ் , ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை எட்டி உள்ளது. இறப்பு எண்ணிக்கை 1 லச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது . பெரும்பாலான நாடுகள் மருந்து தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவை அணுக தொடங்கி விட்டன. ஜெர்மனி கொரானா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இருந்தாலும் நோய் பரவல் கண்காணிப்பிலும் , வீதிக்கு வீதி ஆர்டிபிசி ஆர் பரிசோதனை மையங்களை தொடங்கி கண்காணிப்பை சிறப்பாக செயல்படுத்தியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இத்தகைய முறையை பின்பற்ற இந்தியா ஒவ்வொரு நிலையிலும் முனைப்பு காட்டி வருகிறது.

தொற்று பரவும் விதம்

இந்திய மருத்துவ பாதுகாப்புகவுன்சில் விரிவான ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரானா தொற்று பாதித்தவர் தனிமைக்கு ஆட்படாமல் 30 நாட்கள் வெளியே சுற்றினால் 406 பேருக்கு நோயை பரப்பி விடுவார் என்று தெரிவித்துள்ளது. நோய் பாதிப்பை ஆர் நாட் எனும் அளவு கோல் வைத்து நோய் பரவும் தன்மையை கணிப்பதாகவும் அந்த வகையில் கொரானா வைரஸின் ஆர் நாட் 1.5 ல் இருந்து 4 வரை அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சீனாவில் இருந்து லட்சக்கணக்கான விரைவு பரிசோதனை கருவி இந்தியாவை வந்தடையும் நிலையில் தமிழகம் முழுக்க வட்டார அளவில் நோய் வரும்முன் பரிசோதிக்கும் நுண்நோக்கு திட்டம் தயாராகி வருகிறது.

வலுவான எதிர்ப்பு சக்தி

பாரத தேசத்தில் தென் இந்தியர் குறிப்பாக தமிழகத்தில் உணவு பழக்கமே உடல் வலிமையை இயற்கையாக கட்டமைக்கிறது..தினமும் மூன்று வேளை உணவில் சேர்க்கப்படும் சுக்கு , மிளகு , பூண்டு , பட்டை , லவங்கம் , ஏலக்காய் , மஞ்சள் மற்றும் மூலிகை குணம் கொண்ட கீரைகள் உடலுக்கு அதிக பலம் சேர்க்கிறது. 1946 ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு முதல் வயது முடிவதற்குள் போடப்படும் பிசிஜி தடுப்பூசி சமூகப் பரவலை தடுக்கும் சரியான ஆயுதம் என உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கி உள்ளது. கொரானா வைரஸ் விஷயத்தில் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இவை நடைமுறை நம்பகத் தன்மை ஆதாரமாகவே தென்படுகிறது. இந்த சூழ்நிலையிலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை முழுக்க கொரானா பாதிக்கும் நோயாளிகளுக்கு 80 ஆயிரம் படுக்கை வசதியை ஏற்பாடு செய்வது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது .

காலம் கடந்துபோகும்

தொற்று உறுதிசெய்யப்பட்டவர் கவனமின்றி தனிமையை தவிர்த்தால் 406 பேருக்கு புதிதாக தொற்று பரவலை அதிகரிப்பார் என்ற இந்திய மருத்துவ பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பும் , பாரதப் பிரதமரின் சூசக தகவலும் , சமூக விலகலை கடைப்பிடிப்பதில் இந்திய விளிம்புநிலை மக்கள் காட்டும் அலட்சியமும் – இதுவும் கடந்துபோக சில காலம் கூடுதலாக பிடிக்கும் என்பதை கண்கூடாக உணர்த்துகிறது…..

கட்டுரையாளர்
ஜா.இராஜசேகரன் . கல்வியாளர் சமூக ஆர்வலர் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்டவர்

About Author

You may have missed

error: Content is protected !!