February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உலக சுகாதார அமைப்பின் பாராட்டு பட்டியலில் முதலிடத்தில் இந்தியா -கல்வியாளர் இராஜசேகரன்

உலக சுகாதார அமைப்பின் பாராட்டு பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !

உலக சுகாதார தினமான இன்று இந்த கட்டுரையை பதிவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி .

உலக சுகாதார அமைப்பு 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி சுவிட்ச்சர்லாந்து நாட்டில் உள்ள தொடங்கப்பட்டது. சர்வதேச சுகாதார நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை வகுப்பதற்கான அமைப்பாக உருவானது . சுகாதார அமைப்பில் உலகெமெங்கும் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அமைப்பின் பொது இயக்குனராக ரெட்ரஸ் அதானம் காபிரியே சுஸ் பணியாற்றி வருகிறார் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகளை செயல்படுத்த மருத்துவ நெருக்கடி காலங்களில் கையாளவேண்டிய திட்டங்களை விரிவாக வகுத்து வழங்குகிறது.

தலையாய நோக்கம்

சர்வதேச அளவில் அவசர முக்கியத்துவம் தர வேண்டிய மருத்துவ பொதுப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை எட்டுவதற்கு வழி வகுப்பதே சுகாதார அமைப்பின் தலையாய நோக்கம். கடந்த 2019 டிசம்பர் 31ம் தேதி சீனாவில் புதுவிதமான வைரஸ் தென்படுவதாக முதலில் தென் கொரியா உலக சுகாதார அமைப்பின் கவனத்துக்கு கொண்டு சென்றது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் அடங்கிய குழு ஆய்வு செய்து தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்று நிராகரித்துவிட்டது. தொடர்ச்சியாக பல உறுப்பு நாடுகள் வற்புறுத்தியும் சுகாதார அமைப்பு கவனத்தில் கொள்ளாததால் சீனாவின் நிர்பந்தத்துக்கு பணிந்து உலக சுகாதார அமைப்பு சமரசம் செய்து விட்டதாக பல நாடுகள் கொந்தளித்தன. விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த உலக சுகாதார அமைப்பு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரானா உயிர் கொல்லி வைரஸ் சீனாவில் தொடங்கி வேகமான பரவலை தொடங்கியிருப்பதாக உலக நாடுகளுக்கு பிரகடனப்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த பிப்பிரவரி 28ம் தேதி உலக அரங்கில் கொரானா தீவிரமான ஆபத்தை அரங்கேற்ற இருப்பதாக எச்சரிக்கை வெளியிட்டது.

வடிவமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்

தொற்றுநோய் பரவலின் வேகத்தை தொடர் ஆய்வுகள் மூலம் கணித்த உலக சுகாதார அமைப்பு உலகளாவிய மருத்துவ வழிகாட்டுதல்களை வெளியிட்டது. விரிவான அளவில் வெளியிடப்பட்ட உத்தரவுகளில் மிகக் கடுமையான எச்சரிக்கைகளும் அடங்கி இருந்தன. தொடக்கநிலையில் இந்திய உள்ளிட்ட பல நாடுகள் வழிகாட்டுதலின் வீரியம் குறித்து உணரவில்லை. எல்லைகளை தாண்டி கொரானா வைரஸ் காட்டுத்தீயாய் பரவுவதை சுகாதார அமைப்பு கடுமையாக சுட்டிக்காட்டியபின் உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கின. பல முக்கிய தகவல்கள் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் பகிரப்பட்டன. உலக வானில் வட்டமிடும் உயிர்கொல்லியை தடுக்க வகுக்கப்பட்ட வழிமுறைகள் அமலுக்கு வரத் தொடங்கின

நாடு தழுவிய திட்டமிடல்

கடுமையான மருத்துவ இடர்பாடுகளை எதிர்கொள்ள நோய் பரவல் கண்காணிப்பு ,நிதிமேலாண்மை , அடிப்படை சுமூக ஒருங்கிணைப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கொரனா தொற்று பரவல் வேகம், தன்மை குறித்து அந்தந்த நாட்டின் அடித்தட்டு மக்களும் அறியும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் கொடுக்கும் தகவல்களில் உண்மை , வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தொற்றுநோய்களை அடையாளம் கண்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுவருவதோடு , தொற்று பரவலின் வேகம் பரவல் அதிகரிக்கும் முக்கிய இடங்கள் ,மிக அவசரமாக பரிசோதனை முடிவுகளை தரும் ஆய்வகங்கள் தொடர்ச்சியாக அமைத்திட வழி வகுத்தல், மருத்துவ பணிகளால் ஏற்பட்ட மாற்றம் , முன்னேற்றம் குறித்த முறையான தரவுகளை திரட்டி தலைமைக்கு அனுப்பியவண்ணம் இருக்க வேண்டும்.

நுழைவு வாயில்கள் மூடல்

நாடு தழுவிய தொற்று பரவலுக்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் விமானப்போக்குவரத்து , ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பயண முறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். பல நாட்டு பயணிகளையும் பரிசோதனை வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும். பயணிகளுக்கு உயிர் கொல்லி தொற்றின் கடுமைத் தன்மை குறித்த தகவல்களை தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேசிய அளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகரித்த உபகரணங்கள் கொண்ட பிசிஆர் அதிவேக ஆய்வகங்களை உருவாக்க வேண்டும். இப்பணிகள் சுணக்கமின்றி அசூர வேகத்தில் நடைபெறவேண்டும். நோய் அறிகுறி தென்படுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் குறிப்பட்ட நேரத்தில் சென்றடையும் மையப் பகுதியில் ஆய்வக இடங்களை தெரிவு செய்ய வேண்டும்..

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு

உயிரியல் போர்களத்தில் களமாடும் மருத்துவர்கள் மற்றும் சார்பு பணியார்களின் பயன்பாட்டிற்கான பாதுகாப்பு கவசங்கள், மருந்துகள், உபகர்ணங்கள்(PPE) கட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பயமின்றி சோர்வின்றி நீண்டகால பணியில் ஈடுபட பாதுகாப்பு அவசியம் என்பதை நாடுகள் உணரவேண்டும். துரிதமான களப்பணியில் கண்டறியப்படும் தொற்று உள்வட்ட பரவலில் உள்ளதா? பெருந்தொற்றாத மாறத்தொடங்கிவிட்டதா ? என்பதை அடையாளம் காண வேண்டும். தொற்று அறிகுறி உறுதிசெய்யப்பட்டவர்கள் , தாக்குதலின் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் , சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என வரிசைப்படுத்தி மருத்துவ சேவையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நோயாளிகளுக்கு தற்காப்பு பயிற்சியும் , மருத்துவ சேவையாளர்களுக்கு தனிப்பயற்சியும் அளிக்கப்பட வேண்டும். தொற்றுநோயாளிகளுக்கு மருத்துவ தேவைக்கான கால குறியீட்டை நிர்ணயம் செய்து சரியாக பராமரிக்க வேண்டும்.

மருத்துவ சேமிப்பு கிடங்கு

கடுமைமையான, வேகமான தொற்று பரவல் நேரத்தில் மருத்துவ உபகர்ணங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்தவண்ணமிருக்கும். உபகர்ணதயாரிப்பில் அல்லது வாங்கும் சக்தியை துரிதப்படுத்தி சேமிப்பு கிடங்குகளில் தயார்நிலையில் வைக்க வேண்டும். உபகர்ணங்கள் உடனுக்குடன் பரவலாக சென்றடையும் வகையில் சேமிப்பு கிடங்கு அமைத்திடல் வேண்டும். போராட்ட களத்தில் உள்ள மருத்துவர்கள் , சார்பு பணியாளர்களுக்கான உபகர்ணங்கள் , ஊதியம் வழங்குவதை முன்னிலைப்படுத்தி வரிசைபடுத்த வேண்டும். இதற்கான நுண்நிலை வரைபடம் தயாரித்தல் மிக அவசியம்.

கொள்கைகளை கடைபிடிப்பதில் முதலிடத்தில் இந்தியா

உலக நாடுகள் அவசரகால இடர்பாடுகளை அறியாமல் மெத்தனப்போக்கில் வழிகாட்டுதல்களை முறையாக கையாளத் தவறியதால் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா ,ஸ்பெயின் ,இங்கிலாந்து , இத்தாலி ,ஈரான் நாடுகளும் இந்த பட்டியலில் அடக்கம். நம் இந்திய அரசு ஒவ்வொரு கால நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய போர் காலதந்திர உத்திகளை கடைபிடித்து உயிரிழப்பையும் தொற்று பரவலையும் கட்டுக்குள் வைத்து வருகிறது.. நம் பாரதப் பிரதமர் மாநில வாரியாக தனி கவனத்துடன் நேரடியாக களத்தில் இருப்பதால் தற்காப்பு பணிகள் வேகமெடுத்துவருகிறது. .கொரானா பாதுகாப்பு முன்மாதிரி திட்டத்திற்கு ஏற்ப தேவைகள் வரிசைப்படுத்துவது மட்டுமல்லாமல் விரிவுபடுத்தவும் சூழ்நிலை மாற்றத்துக்கு ஏற்ப உடனடி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டதால் மருத்துவ பரிசோதனையுடன் , பின் தொடர்தலும் கட்டுப்பாட்டுடன் நடைபெறுகிறது.

தனித்தன்மையுடன் தமிழகம்

தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் சுகாதாரம் , பாதுகாப்பு ,வருவாய்துறை , உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஊரடங்கு மற்றும் மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சிகிச்சை பொருட்கள் கையிருப்பு, மருத்துவ மற்றும் சார்பு பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் பயிலரங்கம்மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரான தொற்று பெருந்தொற்றாக பரவாமல் இதுவரை தடுக்கப்பட்டு வருகிறது.. கடுமையான கட்டுப்பாடுகளையும் தாண்டி உள் வட்ட பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழக மக்களிடம் தற்போது நிலவும் பயம் தினமும் சரியாக மாலை 6 மணிக்கு சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தரும் கணக்கு இரத்த ஓட்டத்தை சமன்படுத்துமா , தறிகெட்டு ஓடவைக்குமா என்பதுதான். வைரஸ் தொற்றின் உள்வட்ட பரவவலின் வேகம் ஊரடங்கு நாட்களை நீட்டித்து விடுமோ என்ற அச்சக்குரல் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக்கொண்டிருப்பது நம் தேசத்தின் தலைநகரை எட்டியிருக்கிறது ……

காலம் பதில் சொல்லட்டும் நம்பிக்கையுடன்காத்திருப்போம்

கட்டுரையாளர் ஜா.இராஜசேகரன் கல்வியாளர் ,சமூகஆர்வலர் , மனித வள மேம்பாட்டு ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்டவர்

About Author

error: Content is protected !!