June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உதவி ஆய்வாளர் தற்கொலை பணிசுமை காரணமா ? கேள்வி குறியாகும் காவலர் வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள ராமசந்திரபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் உமையருபாகம் (53). சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உயர் அதிகாரிகள் அதிகளவில் பணிச்சுமை அளித்துள்ளதாக  சொல்லப்படுகிறது  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் 3 நாட்கள் விடுப்பு கேட்டாராம். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்கவில்லை. இதையடுத்து அவர் 8ஆம் தேதி முதல் 30 நாட்கள் மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு ராமசந்திரபுரத்திற்கு வந்துள்ளார்.
ஆனாலும், போன் மூலம் உயர் அதிகாரிகள் அவருக்கு டார்ச்சர் கொடுத்தாக தெரிகிறது  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் ஸ்ரீதேவி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே காவலர்களின் பலரது குடும்பதிற்கு சுற்றுலா என்றால் என்வென்றே தெரியாது அது மேலதிகாரிகளுக்கு தெரியும்,இவ்வளவு ஏன் அந்த மாவட்ட சுற்றுலா தலங்கள் கூட சென்று இருக்க மாட்டார்கள்  ,இவ்வளவு ஏன் அவர்கள் குடும்பத்தோடு சினிமா செல்வது கூட கடினம் ,உறவினர் வீட்டு விசேஷங்கள் ,திருவிழாக்கள் என எல்லாமே அவர்களுக்கு வேடிக்கைதான் அவர்களுக்கும் வருடத்தில் ஒருமுறை ஒரு சுற்றுலா அனுப்பலாம் ஒரு காவல் நிலையத்தில் இருவர் என்ற முறையில் அனுப்பலாம் இதை காவல்துறை மேல் அதிகாரிகள் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வார்களா ?
இப்படி ஒரு காவலர் உயிர் போனால் அந்த குடும்பத்தின் நிலை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கலாம் ஆனால் அது  அந்த தந்தைக்கு ஈடு ஆகுமா ?

About Author

error: Content is protected !!